எடுத்த காரியம் ஜெயமாக செய்யக்கூடிய மாந்தீரீக பயிற்சி!
ஒரு மனைபலகை, ஒரு அகல் விளக்கு, ஒரு தாம்பூலம், அவுல், பொரிக்கடலை, வாழைப்பழம், நாட்டு சர்க்கரை, சந்தனபத்தி, பூ, பசு சாணவிபூதி, கிழக்கு திசையை பார்த்து பலகையை வைத்து அதன்மேல் விநாயகரை வைத்து ஆவின் நெய்யில் தீபம் ஏற்றவேண்டும்.
வாழை இலையில் படையல் போடவேண்டும். விபூதியை தாம்பூலத்தில் பரப்பி வைக்க வேண்டும். நடுவில் முக்கோணச் சக்கரம் போட்டு அதன் நடுவில் வட்டம் போட்டு லம் என்று எழுதி அதன் மேல் எலுமிச்சம் பழம் வைத்து அதன் முன்பாக அமரவும்.
ஓம் க்லீம் மோகன கணபதியே வசிவசி ஹிம்பட் ஸ்வாஹா
என தினமும் 1008 முறை 48 நாட்கள் செய்யவேண்டும். பவுர்ணமி தினத்தில் இதை ஆரம்பிக்கவேண்டும். 48 நாட்கள் மது, மங்கை, மாமிசம், புகையிலை கூடாது. மீறி செய்தால் பலன் கிடைக்காது.
இந்த விபூதியை தினசரி நெற்றியில் இட்டு செல்ல அனைத்தும் ஜெயமாகும் என்பது ஐதீகம்.