எதிரிகளை வெல்ல துர்க்கை அம்மன் மந்திரம்!

105

எதிரிகளை வெல்ல துர்க்கை அம்மன் மந்திரம்!

ஒவ்வொருவரது வாழ்விலும் ஏதாவது ஒரு வழியில் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். அது பணப்பிரச்சனையாக இருக்கலாம், கஷ்டம், துன்பங்கள் என்று ஏதாவது ஒரு வழியில் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். சொத்து தகராறு, நிலப் பிரச்சனை, இட பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை, வீட்டில் வாகனம் நிறுத்துவதற்கு கூட சில இடங்களில் பிரச்சனை வரும். நீ பெரியவனா, நான் பெரியவனா என்பதிலே அடிதடி சண்டை கூட வரும். சிலர் எந்த வேலை செய்தாலும் எதிரிகள் தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.

அப்படி எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபடவும், துன்பங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியோடு வாழவும் பஞ்ச துர்க்கை அம்மனுக்குரிய மந்திரத்தை சொல்லி வழிபடுவது நல்லது. பொதுவாக துர்க்கை என்றாலே யாராலும் வெல்ல முடியாதவள் என்று அர்த்தமாம். இந்த துர்க்கை அம்மனை வழிபடுவோருக்கு கடன் பிரச்சனை தீர்வதோடு, எதிரிகளின் தொல்லையும் இருக்கவே இருக்காதாம்.

துர்க்கை அம்மன் மந்திரம்:

ஓம் காத்யாயனய வித்மஹே

கன்யாகுமாரி தீமஹி

தன்னோ துர்கிப்ரசோதயாத்

பொருள்:

காத்யாயனய என்ற மகரிஷிக்கு மகளாக பிறந்தவளே! எப்போதும் இளம் குமாரியாகவே இருப்பவளே!

உன்னை வழிபடுவோரின் குழப்பங்களை நீக்கி, நல்லறி கொடுத்து எப்போதும் மகிழ்ச்சியோடு வாழ அருளும்படி உன் பாதத்தை தொழுகிறோம்…

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் தினமும் காலை மற்றும் மாலையும் வீட்டில் விளக்கேற்றி வைத்து துர்க்கை அம்மனை மனதார வேண்டி வர வேண்டும் வர தந்து அருள்வாள் என்பது குறிப்பிடத்தக்கது.