எதிர்மறை குணங்களை நீக்கும் கண்ணன் ஸ்லோகம்

288

இந்த ஸ்லோகத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும்.

கண்ணன்ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்

அனைத்து அம்சங்களையும் தன்னுள் முழுமையாக கொண்ட திருமாலின் ஒன்பதாவது அவதாரமான கண்ணனை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் அல்லது எப்போது வேண்டுமானாலும் 108 முறை துதிப்பது நல்லது.

புதன், சனிக்கிழமைகளிலும், மாதத்தில் வரும் ஏகாதசி தினங்களிலும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் உங்கள் பூஜையறையில் இருக்கும் கண்ணனின் படத்திற்கு சில துளசி இலைகளை சமர்ப்பித்து, இந்த ஸ்லோகத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும். ஆக்கபூர்வமான ஆற்றல்கள் பெருகும்.