எந்த மந்திரத்தை எப்போது சொல்ல வேண்டும்?
சிவ பக்தர்கள் எப்போதும் சிவ சிவ என்ற நாமத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். சிவனின் ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை எவர் ஒருவர் தன் வாழ்நாளில் அதிகமாக உச்சரித்து வருகிறார்களோ அவர்களுக்கு மோட்சகதி உண்டு.
விஷ்ணு பக்தர்களுக்கு ஓம் நமோ நாராயணாய எனும் 8 எழுத்து மந்திரம் நற்கதியை பெற்றுக் கொடுக்கும்.
காலையில் நீங்கள் எழுந்திருக்கும் பொழுது –
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி
என்ற மந்திரத்தை சொன்னால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
குளிக்க செல்லும் பொழுது – சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி என்று சொல்லிக் கொண்டே குளிக்க கங்கையில் குளித்த பலன் உங்களுக்கு கிடைக்கும்.
கோயிலுக்கு சென்றால் கோபுர தரிசனம் செய்ய வேண்டும். கோபுர தரிசனத்தின் போது
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
என்று சொல்லிக் கொண்டே கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.
வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா எந்தனுக்கு அருளாய் போற்றி
என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
நல்ல நண்பர்களை பார்க்கும் போது
தோழா போற்றி
துணைவா போற்றி
என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
தரையில் சம்மணக்கால் போட்டு அமரும் போது
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
என்று சொல்ல வேண்டும்.
தண்ணீர் குடிக்கும் பொழுது,
நீரிடை நான்காய், நிகழ்ந்தாய் போற்றி
என்று சொல்லிவிட்டு அந்தந்த வேலைகளை செய்யலாம்.
கடை வைத்திருப்பவர்கள் கடையைத் திறக்கும் பொழுது,
வாழ்வே போற்றி, என் வைப்பே போற்றி – என்று உச்சரிக்கலாம்.
சமையலறையில் அடுப்பை பற்ற வைக்கும் பொழுது,
தீயிடை மூன்றாய், திகழ்ந்தாய் போற்றி – என்று உச்சரிக்க வேண்டும்.
சாப்பாடு சாப்பிடும் பொழுது,
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி, இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி – என்று கூற வேண்டும்.
மனதில் ஒரு விதமான அச்சம் குடி கொள்ளும் பொழுது
அஞ்சேல் என்றிங்கு, அருளாய் போற்றி
என்று உச்சரித்தால் வந்த பயம் தன்னாலே ஓடிப் போய்விடும்.
தூங்க செல்லும் பொழுது,
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி – என்று சொல்லிக் கொண்டே தூங்க செல்ல வேண்டும்.