எல்லா சாபங்களையும் நீக்கும் பிரதோஷ மந்திரம்!

80

எல்லா சாபங்களையும் நீக்கும் பிரதோஷ மந்திரம்!

சிவபெருமானை வழிபட உகந்ததாக கருதப்படுவது பிரதோஷம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வரும் திரையோதசி திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும், பின் மூன்றே முக்கால் நாழிகையும் உள்ள பிரதோஷ காலத்திற்கு சிவபெருமானை குறித்து வழிபடுவதற்கு மிகவும் உகந்ததாகும்.

பிரதோஷ மந்திரம்:

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே

அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ

இந்த மந்திரத்தை பிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஆகிய நாட்களில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று நந்தி பகவானுக்கு அருகம்புல் சாற்றி, சிவபெருமானுக்குரிய வில்வம், நாகப்பூ, செவ்வரளி பூ சாற்றி தீபாராதனை காட்டும் போது 9 முறை அல்லது 11 முறை கூறி வழிபட வேண்டும். இதன் மூலம், மற்றவர்களால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட சாபங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.