ஏழேழு ஜென்மத்துக்கும் வறுமை வராமலிருக்க 4 வரி மந்திரம்!

128

ஏழேழு ஜென்மத்துக்கும் வறுமை வராமலிருக்க 4 வரி மந்திரம்!

காசு, பணம் இல்லாவிட்டாலும், வறுமை மட்டுமே இருக்க கூடாது என்று நினைப்பவர்கள் ஏராளம். உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இவை மூன்றுமே மனிதனின் அடிப்படைத் தேவை. இது மட்டுமே வாழ்வில் கிடைத்துவிட்டால் இதைவிட வேறு எதுவும் தேவையில்லை என்று எத்தனையோ பேர் நினைக்கிறார்கள். வறுமை இல்லாத வாழ்க்கைக்கு அன்னபூரணியே தாய் ஒருவர். வாழ்விலும் எதுவும் இல்லாமலும் இருந்து விடலாம். ஆனால், பசி இல்லாமல் இருக்கவே முடியாது. நாள் முழுவதும் பசித்துக் கொண்டே இருக்கும்.

அந்த அரை வயிறு சோற்றுக்காக தான் மனிதர்கள் இத்தனை போராட்டங்களையும், கஷ்டங்களையும் அனுபவித்து வருகிறார்கள். சரி, இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் வறுமை மட்டுமே வரக் கூடாது என்று எத்தனையோ பேர் நினைக்கிறார்கள். அவர்களுக்கு தான் இந்த 4 வரி மந்திரத்தைப் பற்றி சொல்லப் போகிறோம்.

ஒவ்வொரு நாளும் வீட்டில் விளக்கேற்றும் போது சமையலறையிலும் விளக்கேற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். அதோடு, அரிசி வைக்கும் இடத்தில் மஞ்சளுடன் சேர்த்து ஒரு ரூபாய் காசு அல்லது 5 ரூபாய் நாணயம் போட்டு வைத்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு நாளும் வீட்டில் சமையல் செய்யும் போது குளித்து முடித்து விட்டு இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் வாழ்க்கையில் வறுமை என்பதே வராது. அப்படி, தினமும் சொல்ல நேரமில்லை என்றால் வாரத்தில் ஒரு முறை வெள்ளியன்று கண்டிப்பாக இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். அப்படி செய்தால், அன்னபூரணியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அன்னபூர்ணா ஸ்தோத்ரம்:

நித்யானந்தகரீ வராபயகரீ லௌந்தர்யரத்னாகரீ

நிற்தூதாகில கோரபாபநிகரீ ப்ரயக்ஷமாகேச்வரி

ப்ராலேயாசல வம்சபாவனகரீ காசீபுராதீச்வரீ

பிக்ஷாம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ

இது தான் அன்னபூர்ணா மந்திரம்.

அன்னபூர்ணா மந்திரம் பொருள்:

கைகளில் நித்தியானந்தம், அபயம் ஆகியவற்றை ஏந்தியிருக்கும் அழகிய சமுத்திரம் போன்று இருப்பவளே! கொடூமையான பாவங்களைக் கூட நீக்கி அருள் புரியும் மகேஸ்வர ரூபம் கொண்டவளே! காசியிலிருந்து அருள் புரியும் கருணையின் வடிவே, அன்னையே அன்னபூரணி தாயே எனக்கு பிச்சை கொடுப்பாயாக என்று கேட்பது போன்று இந்த மந்திரத்தின் வரிகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.