ஐயப்பனுக்கு மாலை போடும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் முருகன், ஐயப்பனுக்கு மாலை போடுவது வழக்கம். மாலை போட்டவர்கள் தினமும் தங்களது வீடுகளில் பூஜை செய்துவதும், முதன் முதலில் மாலை போடும் பக்தர்கள் (கன்னி சாமி) வீடுகளுக்கு சென்று பஜனை படிப்பதும் வழக்கம்.
முருகப் பெருமானுக்கு பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என்று அனைவரும் மாலை போடுவார்கள். ஆனால், ஐயப்பனுக்கு ஆண்கள், சிறு குழந்தைகள் தான் மாலை போடுவார்கள், ஐயப்பன் கன்னிச்சாமி என்பதால், பெண்கள் மாலை அணிந்து ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முடியாது. ஆனால், தற்போது ஐயப்பன் கோயில்களில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மாலை அணிந்து கோயிலுக்கு செல்பவர்கள் பாத யாத்திரையாகவும், வேன், பேருந்துகளிலும் சென்று வருவார்கள்.
மாலை அணிந்து கோயிலுக்கு செல்லும் வரையிலும் யாரும், இறைச்சி சாப்பிடக் கூடாது. தினமும் இருமுறை குளித்துவிட்டு சாமிக்கு பூஜை செய்ய வேண்டும். யாரையும் தரக் குறைவாக பேசக் கூடாது. விரதம் இருக்க வேண்டும். இதெல்லாம் முறையாக கடைபிடித்தால் தான் இறைவனின் முழுமையான் அருள் கிடைக்கும். சரி, மாலை போடும் போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும். அதுவும், ஐயப்பனுக்கு மாலை போடும் போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்பது குறித்து பதிவில் காண்போம்…
மகா கணபதி தியான ஸ்லோகம்:
மூக்ஷக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே
ஐயப்பனுக்கு மாலை போடும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம;
இந்த கலியுகத்தில் அனைத்து துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்களை காப்பாற்றும் சக்தி கொண்ட கடவுள் தான் ஐயப்பன் என்பது தான் இந்த மந்திரத்தின் பொருள்.
மாலையை அவிழ்க்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்