ஒவ்வொரு முறையும் சொல்ல வேண்டிய சிவ மந்திரம்!
நடந்தால் நடராசா என்று சொல்ல வேண்டும்.
நின்றால் சொக்கநாதா என்று சொல்ல வேண்டும்.
அமர்ந்தால் அம்மையப்பா என்று சொல்ல வேண்டும்.
படுத்தால் தாயுமானவா என்று சொல்ல வேண்டும்.
பாடினால் காசி விசுவநாதா என்று சொல்ல வேண்டும்.
ஓடினால் விருத்தபுரீசா என்று சொல்ல வேண்டும்.
ஓடி விழுந்தால் திருமறைநாதா என்று சொல்ல வேண்டும்.
எழுந்தால் எம்பெருமானே என்று சொல்ல வேண்டும்.
கதறினால் ஆரூரா என்று சொல்ல வேண்டும்.
குதித்தால் தியாகேசா என்று சொல்ல வேண்டும்.
மடக்கினால், மனம் வாடினால் நெல்லையப்பரே என்று சொல்ல வேண்டும்.
அழுதால் ஆத்மநாதனே என்று சொல்ல வேண்டும்.
ஆடினால் பசுபதீசுவரா என்று சொல்ல வேண்டும்.
சண்டை போடும்போது பெருவுடையாரே என்று சொல்ல வேண்டும்.
முனகினால் ஆதிரெத்தினேசுவரா என்று சொல்ல வேண்டும்.
தின்றால் ஏகாம்பிரேசுவரா என்று சொல்ல வேண்டும்.
ஆனால்…
ஐயன் என்றால் சுந்தர மகாலிங்கம் என்று சொல்ல வேண்டும்.
எப்போதும் திருமுறைகளை உச்சரித்தபடியே செய்தபடியே இருக்க வேண்டும்.
சிவநாமமே நமக்கு பலம்
சிவசிந்தனையே நமக்கு சாதனம்
சிவாயநம
ஓம் நமச்சிவாய