கடன் தொல்லை, திருமணத் தடை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி மந்திரம்!

230

கடன் தொல்லை, திருமணத் தடை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி மந்திரம்!

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய

ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய

மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது

அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா

பக்தர்கள் வேண்டிய வரத்தை நல்கும் சங்கடஹர கணபதியே தங்களை நமஸ்கரிக்கிறேன். முழு முதற் கடவுளாகவும், பூத கணங்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருப்பவரே. பக்தர்களை துன்பத்திலிருந்து காத்து இன்பம் அளிப்பவரே. பக்தர்கர்களோடு எப்போதும் நிலைகொள்பவரே. பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு செயலையும் வெற்றிகொள்ள செய்பவரே.

பக்தர்களை சுற்றியுள்ள எதிர்மறையானவற்றை விலக்கி நன்மைகளைத் தரும் நேர்மறை ஆற்றலை பெறுக செய்பவரே உங்களை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.

சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். இப்படி எண்ணிலடங்கா பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.