கண் திருஷ்டியும், ஆபத்தும் நீங்க சொல்ல வேண்டிய பைரவர் ஸ்லோகம்!

328

கண் திருஷ்டியும், ஆபத்தும் நீங்க சொல்ல வேண்டிய பைரவர் ஸ்லோகம்!

மன அமைதி இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை. செல்வவளம் பெருக சொர்ண ஆகர்ஷன பைரவரை வணங்கலாம். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

பைரவர் ஸ்லோகம்:

“”””””’””””””””””””””””””””””””

ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்

த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்

நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்

வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

பொருள்: சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்கா ரம். சூலம், கபாலம், உடுக்கை தரித்து உலகத் தை காப்பவரே நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசு கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்ரங்க ளையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.

தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்…

ஓம் நமசிவாய..

ஓம் ஸ்ரீ காலபைரவா போற்றி…