கண் திருஷ்டி, செய்வினை நீங்க முனீஸ்வரன் மந்திரம்!

62

கண் திருஷ்டி, செய்வினை பாதிப்பு நீங்க முனீஸ்வரன் மூல மந்திரம்!

நமக்கு பிடிக்காத சிலர் நாம் நன்றாக வாழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக நமக்கு செய்வினை வைப்பார்கள். அதனால், நமக்கு உடல் நலம் பாதிப்பு, குடும்பத்தில் பிரச்சனை, வியாபாரம் நஷ்டம் என்று பல பிரச்சனைகள் வரும். மேலும், நாம் வாழ்வதைப் பார்த்து பொறாமை கொண்டவர்களின் பார்வை நமக்கு திருஷ்டியாக மாறி பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்ற பல பிரச்சனைகளுக்கு முனீஸ்வரனின் மூல மந்திரத்தை சொல்லி வந்தால் நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.

முனீஸ்வரன் மூல மந்திரம்:

ஓம் ஹம் ஜடா மகுடதராய

உக்ர ரூபாய துஷ்ட மர்தனாய

சத்ரு சம்ஹாரனாய ஜடா

முனீஸ்வராய நமஹ

கிராமப்புறங்களில் எல்லைகளில் மக்களுக்கு காவல் தெய்வமாக இருக்கும் தெய்வம் முனீஸ்வரன். ஒரு சிலருக்கு குல தெய்வமாக கூட இருக்கிறார். தீய சக்திகளை அழிக்கும் சக்தி கொண்ட முனீஸ்வரனின் இந்த மந்திரத்தை தினமும் 3 முறை சொல்லிவிட்டு வெளியில் சென்றால் நன்மை உண்டாகும். செவ்வாய் மற்றும் வியாழன் தோறும் அருகிலுள்ள முனீஸ்வரன் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 27 அல்லது 108 முறை சொல்லி வர கண் திருஷ்டி, செய்வினை கோளாறு போன்ற பிரச்சனைகள் நீங்கும். ஊரில் முனீஸ்வரன் கோயில் இல்லாதவர்கள் வீட்டில் முனீஸ்வரன் புகைப்படத்தை வைத்து வழிபடலாம்.