காசு, பணம் சேர ஸ்ரீ லட்சுமி கணபதி மந்திரம்!

103

காசு, பணம் சேர ஸ்ரீ லட்சுமி கணபதி மந்திரம்!

பணத்திற்கு இருக்கும் மதிப்பு கூட மனிதர்களுக்கு இருப்பதில்லை. பணமில்லாதவன் பிணம் என்று சிலர் கூறுவார்கள். அந்தளவிற்கு பணத்திற்கு மதிப்பு. பணத்தை வைத்து தான் எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதற்கு ஒருவருக்கு லட்சுமி கடாட்சமும், காரியம் வெற்றி பெற விநாயகப் பெருமானின் அருளும் வேண்டும். இந்த இரண்டும் சேர்ந்தவாறு காட்சி தருபவர் தான் ஸ்ரீலட்சுமி கணபதி.

அந்த லட்சுமி கணபதியின் மந்திரத்தை சொல்லி வந்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்….

ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்:

ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே

வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

லட்சுமி தேவியின் அனுக்கிரகம் நிறைந்த விநாயகப் பெருமானின் மந்திரம். தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு லட்சுமி தேவியையும், விநாயகப் பெருமானையும் நினைத்து 108 முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விநாயகர் மற்றும் லட்சுமி தேவி படத்திற்கு தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முதல் 1008 முறை சொல்லி வந்தால் வாழ்வில் லட்சுமி கடாட்சமும், வருமானமும் பெருகும். சேமிப்பு அதிகரிக்கும். எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே நடக்கும்.

செயல் எதுவும் தொடங்குவதற்கு முன்னதாக விநாயகப் பெருமானை வழிபடுவது மரபு. அந்த விநாயகப் பெருமானை வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.