காரியங்களில் வெற்றி பெற விபூதி மந்திரம்!

41

காரியங்களில் வெற்றி பெற விபூதி மந்திரம்!

பொதுவாக எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம். ஆனால், எல்லோருக்குமே வெற்றி கிடைத்துவிடுவதில்லை. ஒரு வேலையை தொடங்கி, அதனை பாதியிலேயே விட்டு விடுவதும், நேர்முகத் தேர்விற்கு சென்று பாதியிலேயே திரும்புவதும், புதிய வீடு கட்ட ஆரம்பித்து ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக பாதியிலேயே விடுவதும் வழக்கமாக இருக்கும். என்னடா இது எல்லா காரியமும் பாதியிலேயே பாதியிலேயே நின்றுவிடுகிறது என்று ஒரு நீங்காத கவலை நமது மனதை உருக வைக்கும்.

இது போன்ற சூழலில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி பெறுவதற்கு இந்த விபூதி மந்திரத்தை (காரிய சித்தி மந்திரம்) சொல்லி வந்தால் வெற்றி கிடைக்கும்.

காரிய சித்தி மந்திரம் (விபூதி மந்திரம்):

ஓம் சிவாய நம ஓம்

ஓம் சர்வ சக்தி ஓம்

ஓம் ஓங்கார சக்தி ஓம்

ஓம் பிரணவப் பொருளே ஓம்

ஓம் பஞ்சாட்சரமே ஓம்

ஓம் பிரபஞ்ச சக்தியே ஓம்

ஓம் சர்வகாரிய சித்தி சக்தியே ஓம்

ஓம் சவர் ஜெயசக்தியே ஓம்

ஓம் மசி நசி அங் மங் சங்

ஆதார சக்தியே ஓம்

வீட்டு பூஜையறையில் நெய் விளக்கு ஏற்றி, மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்து அவருக்கு அருகம்புல் சாற்றி அலங்காரம் செய்து, தேங்காய், பழம், சர்க்கரை பொங்கல், கற்கண்டு, ஊதுவத்தி, கற்பூரம், சாம்பிராணி ஆகியவற்றுடன் ஒரு தட்டில் விபூதியை எடுத்துக் கொள்ள வேண்டும். விநாயகருக்கான பூஜையை முடித்துவிட்டு கிழக்கு முகம் பார்த்து அமர்ந்து வெற்றிலை காம்பு அல்லது பூவின் காம்பு கொண்டு தட்டில் கொட்டி வைக்கப்பட்ட விபூதியில் பெரியளவில் ஓம் என்று எழுத வேண்டும். அதற்குள்ளாக சிவாயநம என்று சிவனின் நாமத்தை எழுத வேண்டும்.

இதையடுத்து காரிய சித்தி மந்திரத்தை தொடர்ந்து 11 நாட்கள் 108 முறை சொல்லி வர வேண்டும். மேலும், தினந்தோறும் 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு விபூதி கொட்டி வைக்கப்பட்ட தட்டில் கற்பூரம் ஏற்றி தீபாரதனை காட்டி அந்த விபூதியை நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும். இது போன்று 11 நாட்கள் செய்து வர எடுத்த காரியங்களில் நீங்கள் தான் ஜெயிப்பீர்கள்.