காரிய தடை நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

129

காரிய தடை நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

ஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ!!

பிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ!

அகுண அனூபம் குண நிதான் ஸோ!!

என்ற ஸ்லோகம் காரிய தடையை சீர்செய்யும். இந்த ஸ்லோகத்தை சொல்ல முடியாதவர்கள், இதற்கான பொருளை சொல்லலாம். அதாவது, ரகுநாதா, உன் நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன் எல்லாமே அந்நாமத்தில் அடங்கியுள்ளன. ராமநாமத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் உள்ளன.

வேதத்தின் உயிர்நாடியும், நிர்குணமானவனும், நற்குணங்களின் இருப்பிடமாகவும் இருக்கும் ராம நாமத்தை போற்றுகின்றேன். இந்த மந்திரத்தை சொல்ல எந்த விரதமும் இருக்க வேண்டியதில்லை. நேரமும், காலமும் தேவையில்லை. தினந்தோறும் குளித்து முடித்துவிட்டு 3 முறை சொல்லி வந்தால் போதும். முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்குவதோடு தடைகளும் விலகும் என்பது ஐதீகம்.