குழந்தை வரம் பெற சொல்ல வேண்டிய கிருஷ்ணர் மந்திரம்!

117

குழந்தை வரம் பெற சொல்ல வேண்டிய கிருஷ்ணர் மந்திரம்!

ஆண்டுதோறும் ஆவணி மாதம் வரும் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திர நாள் கிருஷ்ண ஜெயந்தியாக (கோகுலாஷ்டமி) கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 30 ஆம் தேதியான இன்று நல்ல நேரம், கௌரி நல்ல நேரத்தில் பூஜையை தொடங்கலாம். அந்த வகையில், இன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரையில் தான் கௌரி நல்ல நேரம். அந்த நேரத்தில் கிருஷ்ணரை வழிபாடு செய்யலாம்.

கிருஷ்ணரின் முக்கியமான மந்திரங்கள்:

கிருஷ்ணர் ஸ்தோத்திரம்:

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால், அனைத்து விதமான துன்பங்களிலிருந்தும் விடுபடலாம்.

கிருஷ்ணர் மந்திரம்:

ஓம் ஸ்ரீம் நம: ஸ்ரீ கிருஷ்ண

பரிபூர்ணத்மயே ஸ்வாஹா:

கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்:

ஓம் தேவகிநந்தனாய வித்மஹே

வாசுதேவாய தீமஹி

தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத்:

கிருஷ்ணர் ஸ்லோகம்:

ஓம் நமோ விஸ்வரூபாய

விஸ்வ சித்யந்த ஹேதவே

விஸ்வேஸ்வராய விஸ்வாய

கோவிந்தாய நமோ நமஹ

நமோ விக்ஞான ரூபாய

பரமானந்த ரூபிணே

கிருஷ்ணாய கோவிந்தாய

கோவிந்தாய நமோ நமஹ:

குழந்தை வரம் – சொல்ல வேண்டிய மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய

கோவிந்தாய கோபி ஜனவல்லபாய

சந்தான பாக்கியம் தேஹிமே ஸ்வாஹா:

கணவன் மனைவி இருவரும் கையில் வெண்ணெய் வைத்து கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வந்தால் கிருஷ்ணரே மகனாக பிறப்பார் என்பது ஐதீகம்.