குழப்பம் நீங்கி தெளிவு பிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

74

குழப்பம் நீங்கி தெளிவு பிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களின் அம்சமாகத் திகழ்பவர் தத்தாத்ரேயர். மும்மூர்த்திகளின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயரை வழிபட தரித்திரம் நீங்கும் என்பது ஐதீகம். தத்தாத்ரேயரின் காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபட்டு வர, பித்ரு தோஷம் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் நிலவும்.

குரு பிரம்மா என்கிறோம். குரு விஷ்ணு என்கிறோம். குரு மகேஸ்வரா என்று சிவனை வணங்குகிறோம்.

’குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாட்ஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ’ என்கிறோம். ஆகவே, சிவமாகவும் விஷ்ணுவாகவும் பிரம்மாவாகவும் திகழும் தத்தாத்ரேயரை குருவாக வணங்கச் சொல்கிறது புராணம்.

தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம்:

ஓம் திகம்பராய வித்மஹே

யோகாரூடாய தீமஹி

தந்நோ தத்தஹ ப்ரசோதயாத்

தினந்தோறும் இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் 27 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் 3 மடங்கு பலன் கிடைக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும், புத்தியில் தெளிவு பிறக்கும், காரியத்தில் வெற்றி உண்டாகும்.

தத்தாத்ரேயருக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், மஞ்சள் நிற பூக்கள் கொண்டும் வழிபடலாம். தத்தாத்ரேயரது பட்த்தை வீட்டில் வைத்தும் பூஜைகள் செய்யலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் அதிகரிக்கும். தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.