கேட்டது கிடைக்க முருகன் மந்திரம்!

161

கேட்டது கிடைக்க முருகன் மந்திரம்!

எல்லோருமே நினைத்தது நடக்க வேண்டும், கேட்டது எல்லாம் கிடைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். ஆனால், ஒவ்வொருவரின் கிரக நிலைகளைப் பொறுத்து அவர்கள் ஆசைப்பட்டது, நினைத்தது நடக்கிறது என்று கூட சொல்லலாம். ஏனென்றால், ஒருவருக்கு நல்ல காலம் நடந்து கொண்டிருக்கிறது என்றால், அவருக்கு நடப்பது எல்லாமே நல்லதாகவே நடக்கும். இதுவே, ஒருவரது கிரக நிலைகள் சரியில்லை என்றால் அவர் நினைக்காதது, எதிர்பாராதது எல்லாமே நடக்கும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்? நாம் கேட்டது உடனே கிடைக்க வேண்டும் என்றால் முருகனுக்குரிய இந்த மந்திரத்தை சொல்லி வழிபட எல்லாமே நல்லதாகவே நடக்கும்.

முருகன் மந்திரம்:

ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ

செவ்வாய்கிழமை அதிகாலை எழுந்து குளித்து முடித்து பூஜையறையில் முருகன் பட த்திற்கு முன்பாக அமர்ந்து தீபங்கள் ஏற்றி வைத்து ஓம் சௌம் சரவணபவ என்று தொடங்கும் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம்.