கோயில் கோயிலாக சுற்ற வேண்டாம்: 108 அம்மன் சன்னதி!
ஒவ்வொரு அம்மனையும் தரிசிக்க கோயில் கோயிலாக சுற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், ஒரே கோயிலில் 108 அம்மன் சன்னதிகளும் இடம் பெற்றுள்ளன. அப்படி என்ன கோயில் என்று கேட்கிறீர்களா? அதாங்க, ஸ்ரீ அரைக்காசு அம்மன் சன்னதி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சி செய்து வந்த மன்னர்கள் திருக்கோகர்ணம் பிரகதாம்பாளை வணங்கி வந்தனர். பிரகதாம்பாளை வணங்கி வரும் பக்தர்களுக்கு அரிசி, வெல்லம் மற்றும் அன்றைய காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த அரைக்காசில் அம்பாள் உருவத்தை பொறித்துக் கொடுத்தனர். இதனால், பிரகதாம்பாளுக்கு அரைக்காசு அம்மன் என்று பெயர் வந்தது.
ஒருமுறை புதுக்கோட்டையை ஆட்சி செய்த மன்னர் ஒருவர் தான் தொலைத்த பொருளை திரும்ப பெற வேண்டி இந்த அரைக்காசு அம்மனை நினைத்து வழிபட்டார். மன்னர் தொலைத்த பொருள் கிடைத்துவிட்டது. அன்றுமுதல், தொலைந்து போன பொருள் எதுவாக இருந்தாலும் அது திரும்ப கிடைக்க வேண்டி அரைக்காசு அம்மனை நினைத்து வழிபாடு செய்தால், தொலைந்து போன பொருள் திரும்ப கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.
புதுக்கோட்டை சென்று வழிபட முடியாதவர்கள் சென்னை வண்டலூர் அருகாமையில் உள்ள ரத்னமங்கலம் ஸ்ரீ லட்சுமி குபேரர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள அரைக்காசு அம்மன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்த கோயிலில் 108 அம்மன் சன்னதிகள் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அரைக்காசு அம்மனை தரிசனம் செய்துவிட்டு, அதே நேரத்தில் 108 அம்மனையும் தரிசனம் செய்து வர வேண்டும். அப்படி செய்து வர சகல சௌபாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழலாம் என்பது ஐதீகம்.
108 அம்மனையும் தரிசனம் செய்யும் போது 108 முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்….
- ஓம் அதிர்ஷ்ட தேவியே போற்றி
- ஓம் அரைக்காசு அம்மனே போற்றி
- ஓம் அபயவரம் அளிப்பாய் போற்றி
- ஓம் அரைகாசில் தோன்றினாய் போற்றி
- ஓம் அற்புத தாயே போற்றி
- ஓம் சத்திய சொரூபமே போற்றி
- ஓம் அறிவுடை தேவியே போற்றி
- ஓம் ஆடியில் உதித்தவளே போற்றி
- ஓம் அருள்தரும் நாயகியே போற்றி
- ஓம் அன்பிற்கினியவளே போற்றி
- ஓம் சக்தி சொரூபமே போற்றி
- ஓம் அருள்தனை கொடுத்திடுவாய் போற்றி
- ஓம் அலங்கார நாயகியே போற்ற
- ஓம் சுந்தர ரூபிணியே போற்றி
- ஓம் அற்பு அழகே போற்றி
- ஓம் வெல்லப்பிரியையே போற்றி
- ஓம் ஆனந்தம் தருவாய் போற்றி
- ஓம் சமயத்தில் அருள்பவளே போற்றி
- ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
- ஓம் சிந்தையில் உறைபவளே போற்றி
- ஓம் சங்கடங்களை களைவாய் போற்றி
- ஓம் சாந்த சொரூபமே போற்றி
- ஓம் சந்தோஷ நாயகியே போற்றி
- ஓம் செளபாக்கிம் அளிப்பவளே போற்றி
- ஓம் மகாமேருவில் இருப்பவளே போற்றி
- ஓம் சிந்திப்போருக்கு அருள்வாய் போற்றி
- ஓம் காரிய சித்தி தருபவளே போற்றி
- ஓம் சர்வ வரம் தருவாய் போற்றி
- ஓம் கேட்ட வரம் அளிப்பவளே போற்றி
- ஓம் வெல்லமாலை அணிபவளே போற்றி
- ஓம் செம்மையான வாழ்வு அளிப்பவளே போற்றி
- ஓம் சர்வ ஈஸ்வரியே போற்றி
- ஓம் கெட்டதனை நீக்கிடுவாய் போற்றி
- ஓம் நவமணி அரசியே போற்றி
- ஓம் பொருள்தனை கொடுப்பவேள போற்றி
- ஓம் ரத்னமங்கலத்தில் அமர்ந்தவளே போற்றி
- ஓம் ஞாபக சக்தி தருபவளே போற்றி
- ஓம் செவ்வரளி பிரியையே போற்றி
- ஓம் பெளர்ணமி நாயகியே போற்றி
- ஓம் பிரசன்ன நாயகியே போற்றி
- ஓம் ஓம்கார சக்தியே போற்றி
- ஓம் தூயமனம் கொண்டவளே போற்றி
- ஓம் தேவி பிரியையே போற்றி
- ஓம் திருவிளக்கில் உறைவாய் போற்றி
- ஓம் இன்பம் அளிப்பவளே போற்றி
- ஓம் தீயவை அகற்றுவாய் போற்றி
- ஓம் வெல்லத்தில் குடி கொண்டாய் போற்றி
- ஓம் மங்கல வாரப் பிரியையே போற்றி
- ஓம் உயர்வை தருவாய் போற்றி
- ஓம் இன்பத்தின் இடமே போற்றி
- ஓம் மாணிக்க நாயகியே போற்றி
- ஓம் உலகெல்லாம் இருப்பாய் போற்றி
- ஓம் உயிருக்கு உயிரானாய் போற்றி
- ஓம் உயர்மணியே போற்றி
- ஓம் உயர்வான வாழ்வு அளிப்பாய் போற்றி
- ஓம் எளியோனுக்கும் அருள்பவளே போற்றி
- ஓம் உடன் அருள்வாய் போற்றி
- ஓம் சுகம் தருவாய் போற்றி
- ஓம் தூயமனம் படைத்தவளே போற்றி
- ஓம் விஜயம் தரும் வித்தகியே போற்றி
- ஓம் வளமெல்லாம் அளிப்பாய் போற்றி
- ஓம் மங்களம் அளிப்பவளே போற்றி
- ஓம் மனிதருள் இருப்பாய் போற்றி
- ஓம் வாழ்வளிக்கும் உமையே போற்றி
- ஓம் ஞான விளக்கே போற்றி
- ஓம் கிழக்கில் அமர்ந்தவளே போற்றி
- ஓம் யெளவன நாயகியே போற்றி
- ஓம் மாங்கல்யத்தில் உறைவாய் போற்றி
- ஓம் பாவமெல்லாம் ஒழிப்பாய் போற்றி
- ஓம் வரம்பல தருபவளே போற்றி
- ஓம் துயர் துடைப்பாய் போற்றி
- ஓம் வல்லமை பெற்றவளே போற்றி
- ஓம் மாங்கல் தாரிணியே போற்றி
- ஓம் துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
- ஓம் மன்னர் போற்றும் நாயகியே போற்றி
- ஓம் மகிழ்வான வாழ்வளிப்பாய் போற்றி
- ஓம் யோக நாயகியே போற்றி
- ஓம் நினைத்ததை நடத்திடுவாய் போற்றி
- ஓம் மந்திர பொருளே போற்றி
- ஓம் கிருபை தருவாய் போற்றி
- ஓம் மோகன நாயகியே போற்றி
- ஓம் மாதர்க்கு அரசியே போற்றி
- ஓம் நலந்தரும் நாயகியே போற்றி
- ஓம் எண்ணம் வாழ்வாய் போற்றி
- ஓம் காக்கும் பொருளே போற்றி
- ஓம் நீங்காத இன்பம் தந்திடுவாய் போற்றி
- ஓம் மாட்சி பொருளே போற்றி
- ஓம் பொற்புடை நாயகியே போற்றி
- ஓம் ஏழு உலகம் காப்பாய் போற்றி
- ஓம் வியப்புடை நாயகியே போற்றி
- ஓம் தைரியம் அளிப்பாய் போற்றி
- ஓம் பக்குவம் தருவாய் போற்றி
- ஓம் புவன நாயகியே போற்றி
- ஓம் சித்திரக் கொடியே போற்றி
- ஓம் கருணை நிலவே போற்றி
- ஓம் வெல்லும் திறமை உடையவளே போற்றி
- ஓம் பொற்புடை சரணம் போற்றி
- ஓம் பண்பு தருவாய் போற்றி
- ஓம் தீப நாயகியே போற்றி
- ஓம் மரணம் தடுப்பாய் போற்றி
- ஓம் தீபச் சுடரே போற்றி
- ஓம் கவலைகள் தீர்ப்பாய் போற்றி
- ஓம் மரகத வடிவே போற்றி
- ஓம் தயாபரியே போற்றி
- ஓம் ஜன்னம் தருவாய் போற்றி
- ஓம் பாசாங்குசம் கொண்டவளே போற்றி
- ஓம் பிறை வடிவே போற்றி
- ஓம் பிரகாதாம்பாளே போற்றி போற்றி!