சக்தி வாய்ந்த நரசிம்மர் ஸ்லோகம்

335

நரசிம்மருக்கு உகந்த இந்த துதியை தினமும் காலை, மாலை இரு நேரமும் சாமி கும்பிடும்போது படித்து வந்தால் நினைத்தது எல்லாம் கைகூடும்.

நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை
சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே!
எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!
நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை
அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.

இந்த நரசிம்மர் துதியை தினமும் காலை, மாலை இரு நேரமும் சாமி கும்பிடும்போது படித்து வந்தால் நினைத்தது எல்லாம் கைகூடும். இந்த துதியை படிப்பதற்கு முன்பு நரசிம்மருக்கு பானம் நைவேத்தியம் படைத்து வழிபட்டுவிட்டு படித்தால் நரசிம்மர் மனம் குளிர்ந்து அருள்வார்.

இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.

பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். இதனால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் இடைஞ்சல் அகலும்.