சக்தி வாய்ந்த மந்திரங்கள் – மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்!

118

சக்தி வாய்ந்த மந்திரங்கள் – மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்!

பிரபஞ்சத்தை உருவாக்கியவர் சிவபெருமான். அவர் இரக்கத்தின் சின்னமாக விளங்குகிறார். படைத்தல், காத்தல், அழித்தல் என்பதில் அழித்தல் தொழிலை ஏற்று இருப்பவர், சிவபெருமான். ஆனால் இவரை எளிதில் மகிழ்விக்க முடியும். பயத்தைப் போக்க சிவ மந்திரங்களை படிக்கலாம். சிவ மந்திரத்தை உச்சரிப்பதால் நோய்களில் இருந்து விடுபட முடியும்.

பயம் மற்றும் கவலைகள் பறந்து விடும். சிவ மந்திரங்கள் இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். ஒரு மனிதரின் ஆழ் மனது வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் சக்தி சிவ மந்திரத்திற்கு உண்டு. உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த மந்திரங்களுக்கு உண்டு. மனித வாழிவில் அன்றாடம் கடந்து வரும், மன அழுத்தம், சோர்வு, தோல்வி, புறக்கணிப்பு, மற்றும் இதர எதிர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றைப் போக்க இந்த மத்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு தனி நபர், உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்வாக விரக்தியாக ஆற்றல் இழந்து இருக்கும்போது சிவ மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். பிறந்த ஜாதகத்தி;ல் உள்ள எதிர்மறை ஆற்றலைப் போக்கும் சக்தி சிவ மந்திர ஜெபத்திற்கு உண்டு. சிவபெருமானுக்கு பல மந்திரங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தனி நன்மைகள் உண்டு. அவற்றைப் பற்றி தான் ஒவ்வொரு மந்திரமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கபாலி மந்திரம் குறித்து காண்கிறோம்…

மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

அழிக்கும் கடவுளாக சிவபெருமான் இருப்பதால் மனிதனின் இறப்பு குறித்த பயத்தைப் போக்கவும் அவரே உரியவர். ஆகவே மகா மிருத்யுஞ்சய் மந்திரம் இந்த பலனை நமக்கு அளிக்கும்.