சங்கடம் தீர சொல்ல வேண்டிய சனி பகவான் மந்திரம்!

151

சங்கடம் தீர சொல்ல வேண்டிய சனி பகவான் மந்திரம்!

நவக்கிரகங்களில் ஒருவர் சனி பகவான். இவர், சூரிய தேவன் – சாயா தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். காகத்தை வாகனமாக கொண்டவர். இவரது ஒரு கால் ஊனம் என்பதால் மெதுவாக நடப்பவர் என்று கூறப்படுகிறது. ஆகையால் மந்தன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. சனி தேவன், சனீஸ்வரன், மந்தாகரன், சாயாபுத்ரன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

நிழலின் மகனாக பிறந்ததால் சனி பகவான் கருமை நிற தோற்றத்துடன் இருந்தார். சனியின் சக்தியறிந்த சூரியன், சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு சிவபெருமான், தேவர்கள், கடவுளர்கள், மக்கள் என்று பார பட்சமின்றி அனைவருக்கும் அவர்களது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கவே சனி பகவான் பிறந்துள்ளதாக கூறினார்.

பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்க பந்த பாசங்களை துறக்க வேண்டும் என்பதால் சனி தன் பெற்றோரை பிரிந்து சென்று சனிலோகத்தில் வாழத் தொடங்கினார். சனியின் வக்கிர பார்வையின் பிடியில் இருந்து சிவபெருமான் உட்பட யாருமே தப்பியதில்லை என்பர்.

சனி பகவானின் தண்டனையிலிருந்து தப்பிக்க சனிபகவானுக்குரிய மந்திரத்தை சொல்லி வந்தால் தண்டனை குறையும்.

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!

சச்சரவின்றி சாகா நெறியில்

இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

ஒவ்வொரு சனிக்கிழமையும் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டு நவக்கிரக சன்னதியில் இந்த மந்திரத்தை சொல்லி வர சனியின் உக்கிரம் குறையும். அதோடு, உங்களால் முடிந்த அளவிற்கு ஏழை, எளியவருக்கு உதவி செய்ய வேண்டும். இதன் மூலம் சனி பகவானின் வக்கிர பலன் குறையும்.

லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு. 3ஆம் இட த்தில் சனி பகவான் இருந்தால் தீர்க்காயுள் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பெயர், புகழ், அரசியல் செல்வாக்கு உண்டாகும். 6 ஆம் இட த்தில் சனி பகவான் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தனமான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும்.