சங்கடஹர சதுர்த்தியில் சொல்ல வேண்டிய மந்திரம்!

183

சங்கடஹர சதுர்த்தியில் சொல்ல வேண்டிய மந்திரம்!

செவ்வாய் கிழமை 27 ஆம் தேதி ஆடி 11 சங்கடஹர சதுர்த்தி. பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பதற்கேற்ப மிகவும் எளிமையாக இருப்பவர் விநாயகப் பெருமான். பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்று பக்தி பாடலும் உண்டு. சங்கஷ்டம் என்றால் கஷ்டங்கள் சேருதல் என்று பெயர்.

வாழ்க்கையில் வரும் அனைத்து சங்கடங்களையும், கஷ்டங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் இன்று. ஒவ்வொரு பௌர்ணமிக்கு அடுத்த 4ஆம் நாள் சங்கடஹர சதுர்த்தி தினம். அதன்படி, இன்று சங்கடஹர சதுர்த்தி தினம். ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் காலை மற்றும் மாலை என்று இரு நேரங்களிலும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

இந்த சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடும் போது நாம் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய

ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய

மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது

அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா

இந்த மந்திரத்தை தான் சொல்ல வேண்டும். அதோடு, விநாயகரை வழிபடும் போது அவருக்கு பிடித்த அருகம்புல், வெள்ளை எருக்கம் பூ கொண்டு பிரார்த்தனை செய்து வழிபட்டு வர, வாழ்வில் எல்லா வளமும் பெற்று பெறு வாழ்வு வாழலாம்.