சந்திராஷ்டமம் நீங்க சொல்ல வேண்டிய சந்திரன் மந்திரம்!

55

சந்திராஷ்டமம் நீங்க சொல்ல வேண்டிய சந்திரன் மந்திரம்!

ஒரு ராசியிலிருந்து 8ஆவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய காலம் தான் சந்திராஷ்டமம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு நட்சத்திரத்துக்குப் 17ஆவது நட்சத்திரத்தின் பாதத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது அந்த நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம். இந்த நாளில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பேசும் வார்த்தையில் கவனம் வேண்டும், புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது, மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படும் என்றெல்லாம் கூறுவார்கள். தேவையில்லாமல் பிரச்சனைகள் தான் வரும்.

இப்படிப்பட்ட இந்த சந்திராஷ்டம நாட்களிலிருந்து எப்படி தப்பிப்பது? என்ன செய்வது என்று கேட்டால், அதற்கு சந்திர பகவானுக்குரிய சக்தி வாய்ந்த மந்திரத்தை சொல்லி வந்தால், சந்திராஷ்டமம் நீங்கும்.

சந்திர பகவான் மந்திரம்:

ஓம் ஸ்ரீம் க்ரீம் ஹம் ரம் சம் சந்த்ராய நம

மனங்களை கட்டுப்படுத்தும் சந்திர பகவானின் மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்து 11 முறை சொல்லி வருவது நல்லது. திங்கள் கிழமை, மாத த்தில் வரும் நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டம தினங்கள், பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்கள் இந்த மந்திரத்தை சொல்லி வழிபடுவதால் சந்திராஷ்டம தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

மேலும், கோபம் குறையும், மன அழுத்தம் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன் – மனைவி இடையிலான பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும். அதோடு, சந்திர பகவானின் முழுமையான அருள் கிடைக்கும்.