சனிப்பிரதோஷம்: நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்க நந்தி ஸ்லோகம்!

201

சனிப்பிரதோஷம்: நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்க நந்தி ஸ்லோகம்!

சிவனை மட்டுமல்லாமல் சிவனின் சீடராகவும், வாகனமாகவும் விளங்கும் நந்திதேவரையும் மறக்காமல் வழிபட்டு வர வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கப் பெறுவீர்கள். நாம் நினைத்த காரியங்களில் வெற்றி பெற இறைவனின் அனுக்கிரமும் வேண்டும். அதற்கான நந்தி பகவானின் நந்தி ஸ்லோகம் இது….

நந்தி ஸ்லோகம்:

நந்திகேசி மஹாயாக

சிவதயா நபராயண கௌரீ

சங்கரஸேவர்த்தம்

அனுக்ராம் தாதுமாஹஸ

இந்த நந்திகேஸ்வரரின் ஸ்லோகத்தை அல்லது மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று 9 முறை அல்லது 27 முறை சொல்லி வழிபடலாம். அதோடு, ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆண்டு தோறும் வரும் மஹா சிவராத்திரி ஆகிய நாட்களில் விரதமிருந்து சிவனை வழிபட்டு நந்திகேஸ்வரருக்குரிய மந்திரத்தையும் சொல்லி வணங்கி வர நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

சிவனின் வாகனம் என்றில்லாமல், அவரின் உண்மையான சீடராகவும் விளங்கியவர் நந்தி தேவர் என்று கூறப்படுகிறது. மேலும், நந்தீசர் என்ற சித்தர் சிவனின் சீடரான நந்தி பகவான் தான் என்று சொல்லப்படுகிறது. அவரை போற்றும் இந்த மந்திரத்தை சொல்லும் போதும் நமக்கும் நன்மைகள் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.