சனி தோஷம் நீங்க சொல்ல வேண்டிய சனி பகவான் 108 போற்றி!

159

சனி தோஷம் நீங்க சொல்ல வேண்டிய சனி பகவான் 108 போற்றி!

சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சனி பகவானுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் சொல்லி வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம். வாரம் ஒருமுறை சனிக்கிழமைகளிலும் காலை வேளையில் சொல்லி வரலாம்.

சனி பகவான் 108 போற்றி

 1. ஓம் அருளுங்கால் இனியனே போற்றி!
 2. ஓம் அசுப கிரகமே போற்றி!
 3. ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி!
 4. ஓம் அனுஷத்ததிபதியே போற்றி!
 5. ஓம் அலிக்கிரகமே போற்றி!
 6. ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி!
 7. ஓம் அன்னதானப் பிரியனே போற்றி!
 8. ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி!
 9. ஓம் ஆயுட்காரகனே போற்றி!
 10. ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி!
 11. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி!
 12. ஓம் இருவாகனனே போற்றி!
 13. ஓம் இரும்பு உலோகனே போற்றி!
 14. ஓம் இளைத்த தேகனே போற்றி!
 15. ஓம் இரும்புத் தேரனே போற்றி!
 16. ஓம் ஈடிலானே போற்றி!
 17. ஓம் ஈசுவரனானவனே போற்றி!
 18. ஓம் உக்கிரனே போற்றி!
 19. ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி!
 20. ஓம் உபகிரகமுளானே போற்றி!
 21. ஓம் எமன் அதிதேவதையனே போற்றி!
 22. ஓம் எண்பரித் தேரனே போற்றி!
 23. ஓம் எள் விரும்பியே போற்றி!
 24. ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி!
 25. ஓம் ஏழாம் கிரகனே போற்றி!
 26. ஓம் கரு மெய்யனே போற்றி!
 27. ஓம் கலி புருஷனே போற்றி!
 28. ஓம் கழுகு வாகனனே போற்றி!
 29. ஓம் கருங்குவளை மலரனே போற்றி!
 30. ஓம் கரிய ஆடையனே போற்றி!
 31. ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி!
 32. ஓம் கருங்கொடியனே போற்றி!
 33. ஓம் கருநிறக் குடையனே போற்றி!
 34. ஓம் கண்ணொன்றிலானே போற்றி!
 35. ஓம் காகமேறியவனே போற்றி!
 36. ஓம் காசியில் பூசித்தவனே போற்றி!
 37. ஓம் காரியே போற்றி!
 38. ஓம் காற்றுக் கிரகமே போற்றி!
 39. ஓம் குளிர்க் கோளே போற்றி!
 40. ஓம் கும்பராசி அதிபதியே போற்றி!
 41. ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி!
 42. ஓம் குளிகன் தந்தையே போற்றி!
 43. ஓம் குறுவடிவனே போற்றி!
 44. ஓம் கைப்புச்சுவையனே போற்றி!
 45. ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி!
 46. ஓம் சடையனே போற்றி!
 47. ஓம் சமரிலானே போற்றி!
 48. ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி!
 49. ஓம் சனிவார நாயகனே போற்றி!
 50. ஓம் சாயை புத்ரனே போற்றி!
 51. ஓம் சிவனடியானே போற்றி!
 52. ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி!
 53. ஓம் சீற்றனே போற்றி!
 54. ஓம் செயலறச் செய்பவனே போற்றி!
 55. ஓம் சுடரோன் சேயே போற்றி!
 56. ஓம் சுக்ர நண்பனே போற்றி!
 57. ஓம் சூரனே போற்றி!
 58. ஓம் சூலாயுதனே போற்றி!
 59. ஓம் சூர்ய சத்ருவே போற்றி!
 60. ஓம் தமோகணனே போற்றி!
 61. ஓம் தண்டாயுதனே போற்றி!
 62. ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி!
 63. ஓம் தனிக்கோயிலுளானே போற்றி!
 64. ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி!
 65. ஓம் தீபப் பிரியனே போற்றி!
 66. ஓம் துலாராசியிலுச்சனே போற்றி!
 67. ஓம் துயரளித்தருள்வோனே போற்றி!
 68. ஓம் தைரியனே போற்றி!
 69. ஓம் தொலை கிரகமே போற்றி!
 70. ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி!
 71. ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி!
 72. ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி!
 73. ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி!
 74. ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி!
 75. ஓம் பயங்கரனே போற்றி!
 76. ஓம் பக்கச் சுழலோனே போற்றி!
 77. ஓம் பத்மபீடனே போற்றி!
 78. ஓம் பத்திரை சோதரனே போற்றி!
 79. ஓம் பிணிமுகனே போற்றி!
 80. ஓம் பிரபலனே போற்றி!
 81. ஓம் பீடிப்பவனே போற்றி!
 82. ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி!
 83. ஓம் புஷ்பப்பிரியனே போற்றி!
 84. ஓம் புதன்மித்ரனே போற்றி!
 85. ஓம் பூசத் ததிபதியே போற்றி!
 86. ஓம் பேதமிலானே போற்றி!
 87. ஓம் பைய நடப்பவனே போற்றி!
 88. ஓம் போற்றப்படுபவனே போற்றி!
 89. ஓம் மகரத்தாள்பவனே போற்றி!
 90. ஓம் மதிப்பகையே போற்றி!
 91. ஓம் மநு சோதரனே போற்றி!
 92. ஓம் மாங்கல்ய காரகனே போற்றி
 93. ஓம் முடவனே போற்றி!
 94. ஓம் முதுமுகனே போற்றி!
 95. ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி!
 96. ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி!
 97. ஓம் மேல் திசையனே போற்றி!
 98. ஓம் மேற்கு நோக்கனே போற்றி!
 99. ஓம் யமுனை சோதரனே போற்றி!
 100. ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி!
 101. ஓம் வன்னி சமித்தனே போற்றி!
 102. ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி!
 103. ஓம் வக்கரிப்பவனே போற்றி!
 104. ஓம் வளை மூன்றுளானே போற்றி!
 105. ஓம் வில்லேந்தியவனே போற்றி!
 106. ஓம் வில்வப்பிரியனே போற்றி!
 107. ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி!
 108. ஓம் சனீச்வரனே போற்றி!