சனி மஹா பிரதோஷம்: பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்!

103

சனி மஹா பிரதோஷம்: பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்!

பிரதோஷம் ஐந்து வகைப்படும். நித்திய பிரதோஷம், பக்‌ஷப் பிரதோஷம், மாத பிரதோஷம், மஹா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் ஆகியவை. ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷ நாட்களில் சனிக்கிழமையில் வரும் சனி மஹா பிரதோஷத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

சனிக்கிழமையில் வரும் பிரதோஷ காலங்களில் சிவனை தரிசித்தால், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் வந்து சேரும். செல்வாக்கு கிடைக்கும். சனிக்கிழமையில் வரும் பிரதோஷ நாளில் செய்யும் தானமும் அளவில்லாத பலனைக் கொடுக்கும். இவ்வளவு ஏன், மறுபிறவி இல்லாத முக்தியைக் கொடுக்கும்.

இந்த சனி மஹா பிரதோஷம் தினத்தில் பிரதோஷ மந்திரம் சொல்லி வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் நீங்கள் என்பது பொருள்.

மந்திரம் 1:

ஓம் சிவசிவ சிவனே சிவபெருமானே போற்றி போற்றி விரைவினில் வந்தருள் விமலா போற்றி போற்றி

மந்திரம் 2:

ஓம் மஹா, ஈசா மகேசா போற்றி போற்றி மனதினில் நிறைந்திடும் பசுபதியே போற்றி போற்றி

மந்திரம் 3:

ஓம் மூவுலகிற்கதிபதியே முதல்வா போற்றி போற்றி மூவா இளமையருளும் முக்கண்ணா போற்றி போற்றி

மந்திரம் 4:

ஓம் ஐந்தெழுத்தின் உட்பொருளே போற்றி போற்றி திரு ஐயாறமர்ந்த குருபரனே போற்றி போற்றி

மந்திரம் 5:

ஓம் சத்தியமே சத்தியத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி

மந்திரம் 6:

ஓம் உமையொருபங்கா போற்றி போற்றி அதற்கு மோர்த்திருமுகமே போற்றி போற்றி

மந்திரம் 7:

ஓம் உலகமே நாயகனே லோக நாயகா போற்றி போற்றி அகோரத்திற்கோர் திருமுகமே போற்றி போற்றி

மந்திரம் 8:

ஓம் உருத்திர பசுபதியே போற்றி போற்றி

மந்திரம் 9:

ஓம் உருத்திர தாண்டவ சிவனே போற்றி போற்றி

மந்திரம் 10:

ஓம் ஓம் அகோர மூர்த்தியே லிங்கமே போற்றி போற்றி அதற்கு மோர்திருமுகமே போற்றி போற்றி

மந்திரம் 11:

ஓம் உமையே அம்பிகையே அம்பிகையின் பாகா போற்றி போற்றி அம்பிகைக்கோர் முகமே அம்பிகா பதியே போற்றி போற்றி

மந்திரம் 12:

ஓம் பஞ்சாட்சரனே பஞ்சமுகங் கொண்ட பரமனே போற்றி போற்றி

மந்திரம் 13:

ஓம் சாம்பசிவ சதா சிவனே சத்குருவே போற்றி போற்றி

மந்திரம் 14:

ஓம் ஜடையுடைய ஜடாதரனே ஜம்பு நாதா போற்றி போற்றி

மந்திரம் 15:

ஓம் சந்திரனை சூரியனை நெருப்பைக் கொண்ட முக்கண்ணா போற்றி போற்றி

மந்திரம் 16:

ஓம் கங்காதரனே கங்களா போற்றி போற்றி

மந்திரம் 17:

ஓம் இடபத்தூர்ந்து செல்லும் இறைவா போற்றி போற்றி ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ

பிரதோஷ தினமான இன்று அதுவும் சனி மஹா பிரதோஷமான இன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளாக இந்த மந்திரத்தை சிவன் கோயிலில் வைத்து சொல்ல வேண்டும். அதற்கு முன்னதாக ஓம் நவசிவாய என்ற மந்திரத்தை 11 முறை சொல்லிவிட்டு, இந்த சிவமூர்த்தி மந்திரத்தை பார்த்தோ, பார்க்காமலோ சொல்ல வேண்டும். மேலும், சிவனுக்குரிய வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சனிப்பிரதோஷமாக இருந்தால் கூடுதல் சிறப்பு உண்டு. ஏனென்றால், சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்திய நாள் சனிக்கிழமை. ஆதலால், சனிக்கிழமை பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஒரு நாளாவது ஒரு நேரம் மட்டும் உணவருந்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் 120 வருடம் சிவனை தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.