சிங்கத்தைப் போன்ற வீரம் கிடைக்க சந்திரகாண்டா மந்திரம்!

162

சிங்கத்தைப் போன்ற வீரம் கிடைக்க சந்திரகாண்டா மந்திரம்!

நவராத்திரி 3ஆம் நாளில் சந்திரகாண்டா தேவி வழிபாடு செய்யப்படுகிறது. நீதியை நிலைநாட்டி சந்திர பிறையை அணிந்து கொண்டவள். சந்திர என்றால் நிலவு, காண்டா என்றால் மணி என்று பொருள். சந்திர பிறையானது இவளது நெற்றியில் மணி போன்று இருப்பதால், சந்திரகாண்டா என்று அழைக்கப்படுகிறாள்.

சிங்க வாகனத்தில், 3 கண் மற்றும் 10 கரங்களுடன் காட்சி தருகிறாள். சந்திரகாண்டாவின் 2 கரங்கள் பக்தர்களுக்கு அருள் செய்யும் விதமாக உள்ளன. போருக்கு தயாரான கோலத்தில் காட்சி தருவதால், தனது பார்வையின் மூலமாக பக்தர்களின் துன்பங்களை நீக்கி அவர்களுக்கு இன்பத்தை அளிக்கிறாள்.

கடும் கோபமும், ஆக்ரோஷமும் கொண்டிருக்கும் சந்திரகாண்டா தேவியை வழிபட சிங்கத்தைப் போன்ற வீரம் கிடைக்கும், பாவம் அழியும், அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சந்திரகாண்டா மந்திரம்:

ப்ரிடிஞ்சபர வரூதா சந்திரகோபஸ்த கரியுதா

பிரசாதம் தந்துனே மகாயும் சந்திரகண்டெதி விஸ்ருதா

இந்த மந்திரத்தை சொல்லி சந்திரகாண்டா தேவியை வழிபட அனைத்து நன்மைகளும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சந்திரகாண்டா கோயில் உள்ளது.