சிறப்பான, அழகான மனைவி அமைய குரு மந்திரம்!

38

சிறப்பான, அழகான மனைவி அமைய குரு மந்திரம்!

ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் திருமணத்திற்கு நல்ல மனைவி, கணவன் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர். ஆனால், அனைவருக்கும் அப்படி அமைவதில்லை. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூட பழமொழி உண்டு. திருமணத்திற்குப் பிறகு கணவன் – மனைவிக்கிடையில் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக ஒவ்வொருவரும் நீதிமன்றத்தை தேடி செல்கின்றனர்.

திருமணம் என்றால் புரிதல். கணவன் – மனைவிக்கிடையில் புரிதல் இருந்துவிட்டாலே எந்த பிரச்சனையும் வராது. ஒவ்வொருவரும் ஜாதக பொருத்தம், நாள், நட்சத்திரம் பார்த்து தான் திருமணம் செய்கிறார்கள். சிலர் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் செய்து கொண்டு கொஞ்ச நாட்களிலேயே பிரச்சனை வருகிறது, பிரிந்துவிடுகிறார்கள். சிலருக்கு திருமணம் நடப்பதிலேயே சிக்கல் இருக்கும். திருமண தடைகள் நீங்கவும், இப்படியெல்லாம் நடக்காமல் நல்ல, மனைவி, அன்பான மனைவி, சிறப்பான மனைவி அமையவும் இந்த மந்திரத்தை சொல்லி வந்தாலே போதுமானது.

குரு மந்திரம்:

ஓம் குருதேவாய வித்மஹே

பரப்ரஹ்மாய தீமஹி

தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராசார்யாய வித்மஹே

தேவபூஜ்யாய தீமஹி

தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் குருதேவாய வித்மஹே

பரம் குருப்யோம் தீமஹி

தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராசார்யாய வித்மஹே

மஹாவித்யாய தீமஹி

தன்னோ கருஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்கிரஸாய வித்மஹே

சுராசார்யாய தீமஹி

தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்

குரு மந்திரத்தை தினமும் சொல்லி வர வேண்டும். அப்படி தினந்தோறும் சொல்ல முடியாதவர்கள் வாரந்தோறும் வரும் குரு பகவானுக்குரிய நாளான வியாழன் அன்று இந்த குரு பகவான் மந்திரத்தை சொல்லி வழிபட்டால் சிறப்பான, அழகான மனைவி அமையப் பெறலாம்.