சிவனுக்குரிய திங்களில் சொல்ல வேண்டிய மந்திரம்!

52

சிவனுக்குரிய நாளான திங்களில் சொல்ல வேண்டிய மந்திரம்!

ஒருவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ப பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டும். அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்கள் அமையும். எனினும், அதற்கு பரிகாரங்களும் உண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

மேலும் படிக்க:ஆகஸ்ட் மாதம் இந்த ராசிக்கு தர்ம கர்மாதிபதி யோகம்!

பாவங்கள் நீங்க, முழு முதல் கடவுளான சிவனை நினைத்து மனதார இந்த மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். சிவனுக்கு உரிய நாள் என்பது திங்கள். அதாவது சோமவார். எனவே அந்த கிழமையில் அல்லது பிரதோஷ நாளில் அல்லது சிவராத்திரி நாளில் சிவன் சன்னதிக்கு சென்று இந்த மந்திரங்களை சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும். அதுவும் சிவனுக்குரிய நாளான திங்களன்று இந்த மந்திரத்தை சொல்லி வந்தால், பாவங்கள் நீங்கி செல்வ வளம் பெறலாம்.

சிவ மந்திரம்:

நமச்சிவாய வாழ்க!

நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

 

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!

தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

 

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!

தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்