செய்யும் தொழில் வெற்றி பெற விநாயகர் மந்திரம்!

143

செய்யும் தொழில் வெற்றி பெற விநாயகர் மந்திரம்!

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை இந்த கொரோனா காலகட்டம் நம் கண் முன் கொண்டு வந்து விட்டது. கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரும் பொருளாதார சிக்கலை அனுபவித்து வந்தோம். இப்பொழுதுதான் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொருளாதார தேவைக்காக கிடைத்த வேலைகளை எல்லாம் செய்ய முயற்சித்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறோம்.

எந்தவொரு முயற்சி செய்தாலும் தொடக்கம் சரியாக இருந்தால் மட்டுமே அதில் வெற்றி பெற முடியும். அப்படி நமது வாழ்க்கையில் எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்னதாக விநாயகரை வழிபட்டு தொடங்கினால் கண்டிப்பாக அந்த காரியம் வெற்றி பெறும். அப்படி அந்த விநாயகப் பெருமானை வழிபடுவதற்கான மந்திரம் இதோ…

விநாயகர் மந்திரம்:

ஓம் செல்வம் அருள்க தேவா போற்றி

ஓம் நல்லன எமக்கருள் நாயக போற்றி

ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி

ஓம் காக்க எங்களை உன்கழிலிணை போற்றி

இந்த மந்திரத்தை பௌர்ணமி நாளில் காலை 6 மணி முதல் 9 மணிக்குள்ளாக அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று அருகம்புல் சாற்றி எருக்கம் பூக்கள் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 27 முறை சொல்லி வழிபட வேண்டும். காலையில் செய்ய முடியாதவர்கள் மாலையில் 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக விநாயகர் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

அப்படி விநாயகர் வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். செய்யும் தொழில், செல்வ செழிப்பு, ஊதியம் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குடும்பத்தில் நீங்கள் விரும்பியதை நிறைவேற்றி தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையில் அவர்கள் விரும்பிய அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவார் அந்த விநாயகப் பெருமான்.