செல்வத்தை அள்ளி அள்ளி தரும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்!

109

செல்வத்தை அள்ளி அள்ளி தரும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்!

மக்களின் முக்கியமான தேவை பணம். என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் நாலு காசு சேர்த்து வைக்க முடியவில்லை. நகை நட்டு வாங்க முடியவில்லை என்று வருத்தப்படுபவகள் எத்தனையோ பேர். ஆனால், இருப்பதை வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்பவர்கள் வெகு சிலரே.

ஒரு சிலரிடம் பணம் அளவுக்கு அதிகமாக கொட்டி கிடக்கும். ஒரு சிலரிடம் பணம் தங்கவே தங்காது. இதற்கு ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். அதையெல்லாம் நீக்கிவிட்டு, உங்களிடமும் பணம் சேர உதவும் ஒரு மந்திரம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை

சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா!

ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும். இந்த மந்திரம் சொல்லும் போது சுத்தமாக இருக்க வேண்டும். மேலும், உடலும், உள்ளமும் தூய்மையாக இருந்தால் தான் இந்த மந்திரத்தின் பலன் கிடைக்கும்.