செல்வம் சேர பூஜையறையில் சொல்ல வேண்டிய மந்திரம்!
பணக்காரனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் செல்வம் வேண்டுமா என்று கேட்டால் வேண்டும் என்றுதானே சொல்வார்கள். பொன், பொருள், செல்வம் என்று அனைத்தும் மீது அனைவருக்கும் ஆசை உண்டு. அப்படி அனைத்தையும் பெறுவதற்கு வீடுகளில் பூஜையறையில் விளக்கேற்றி சிவன் மந்திரம் சொல்வதோடு ஒவ்வொரு திங்கன்றும் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.
சிவன் வழிபாடு:
பொன்னர் மேனியனே புலித்தோலை யரைக் கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தலனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னை உன்னையல்லாமல் இனியாரை நினைக்கேனே.
மேலும் தெரிந்து கொள்ள: சிவனுக்குரிய நாளான திங்களில் சொல்ல வேண்டிய மந்திரம்!
சக்தி வழிபாடு:
கருத்தன எந்தை தன்கண் அன, வண்ணக் கனவெற்பிற்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன, பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
மருத்து அனமூரலும் நீயும் அம்மே; வந்து என்முன் நிற்கவே!
மேலும் படிக்க: குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?
விநாயகர் வழிபாடு:
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன், கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
முருகன் வழிபாடு:
நாளென் செய்யும் வினை தானென் செயுமெனைநாடிவந்த
கோளென் செயுங் கொடுங்கூற்றென் செயுங் குமரே சரிரு
தாளும் சிலம்பும் சலங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
ஆஞ்சநேயர் வழிபாடு:
அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே
ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற் காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்
அளித்துக் காப்பான்!