சொந்த வீடு வாங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

217

சொந்த வீடு வாங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

பணம் இருப்பவர்களிடம் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். பணம் இல்லாதவர்கள் கைக்கு கூட பணம் வராது. இது என்னவோ பணத்தின் சாபமா அல்லது அவர்கள் வாங்கி வந்த வரமா தெரியவில்லை. ஏன் இந்த நிலை? இதனை எப்படி மாற்றுவது? போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கவே இந்தப் பதிவு. ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் ஏற்றத் தாழ்வுகள் என்பது நிலையானது. அது எப்போது வேண்டுமானாலும், வரலாம், போகலாம். பொருளாதார நிலையை வைத்துத் தான் அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்படுகிறது.

இப்படி பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த காலகட்டத்தில் நமது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வழிமுறைகளையும் பணத்தை ஈர்க்கும் வழிமுறைகள் பற்றியும் காண்போம்.

ஒருவரது ஜாதக பலனும், கிரக நிலைகளும், முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களும் இதற்கு ஒரு காரணமாக கூட இருக்கலாம். தொட்டது எல்லாம் துலங்கும், கை வைத்த இடமெல்லாம் பொன்னாகும் என்று பழமொழி உண்டு. அதற்கேற்ப ஒரு சிலரது வாழ்க்கை அமைப்பு இருக்கும். இதற்கு ஜாதக கட்டம், கிரக நிலைகளின் அமைப்பு தான் காரணம்.

ஒருவரது ஜாதகத்தில் 1, 2, 5, 8, 9, 11 ஆம் வீட்டில் சுக்கிரன் ஆதிக்கம் செலுத்தியிருந்தால் பணவரவு தானாகவே வந்து சேரும். வீட்டில் சும்மா இருந்தால் கூட யாரேனும் வந்து உங்களிடம் பணம் கொடுத்துவிட்டு செல்லும் ஒரு அமைப்பு. இதைப் பொறுத்து கிரகங்களின் அமைப்பு உங்களுக்கு சாதகமாக இருப்பதாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பணத்தை ஈர்க்கும் கிரகங்கள்:

செல்வத்திற்கு உரிய கிரகம் வியாழன் (குரு). வியாழனின் அனுக்கிரகம் இருந்தால் உங்களிடம் செல்வம் கொட்டிக் கொண்டிருக்கும்.

சுக்கிர பகவான் ஆடம்பர வாழ்க்கைக்கும், வசதியான வாழ்க்கைக்கும் உரிய கிரகம். சுக்கிரனின் அமைப்பு உங்களுக்கு சாதகமாக இருந்தால் உங்களது வாழ்க்கையில் அளவுக்கு அதிகமாகவே செல்வங்கள் சேரும்.

தொழில்காரகன் புதன் – நிதிக்கு அதிபதி புதன். புதனின் ஆதிக்கம் உள்ளவர்கள் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். நீங்கள் எந்த தொழில், வியாபாரம் செய்து வந்தாலும் அதில் பல மடங்கு லாபம் கிடைக்கும்.

பணத்தை ஈர்ப்பதற்கான பூஜை மற்றும் வழிபாடுகள்:

வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் சந்தோஷி மாதா விரதம் அப்படியில்லையென்றால் வைபவ லட்சுமி விரதம் மேற்கொள்வதன் மூலமாக பண வரவு அதிகரிக்கும்.

சனிக்கிழமை தோறும் குரங்குகளுக்கு கொண்டக் கடலையை உணவாக கொடுத்தால் வருமான தடை நீங்கி பண வரவு அதிகரிக்கும்.

பண வரவு அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம்:

ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம

ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாஸுதேவாய நம

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலேயாய பிரசீத பிரசாத்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியே நம

தினந்தோறும் காலையில் பூஜை செய்து முழு மனதுடன் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் பண வரவு அதிகரித்து செல்வ செழுப்புடன் வாழும் வாழ்க்கை அமையும். இவ்வளவு ஏன், சொந்த வீடு கட்டும் யோகம் கூட வரும். அந்தளவிற்கு பண வரவு அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.