சோம்பல் நீங்க துர்கா தேவியின் அம்சமான பிரம்மச்சாரிணி வழிபாட்டு மந்திரம்!

201

சோம்பல் நீங்க துர்கா தேவியின் அம்சமான பிரம்மச்சாரிணி வழிபாட்டு மந்திரம்!

நவராத்திரி 2ஆம் நாளில், நவதுர்க்கையின் 2ஆவது அம்சமான பிரம்மச்சரணி அல்லது தேவி யோனி வழிபாடு செய்யப்படுகிறது. பிரம்ம என்பதற்கு தபஸ் என்பது பொருள். பிரம்மச்சாரிணி (பிரம்மச்சரிணி) என்றால் தப சாரிணி என்று பொருள். எப்போதும் எளிமையாக காட்சி தரக்கூடியவள். தனது வலது கரத்தில் கமண்டலம் வைத்து பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். வாகனம் ஏதும் இல்லாமல், இந்த பூமியில் நடப்பவளாக காட்சிபடுத்தப்படுகிறாள்.

பல ஆண்டுகளாக கடுந்தவம் புரிந்து சிவபெருமானை திருமணம் செய்தாள். நன்றி, அறிவு மற்றும் ஞானம் ஆகியவற்றின் வடிவானவள். தன்னை வணங்கி வழிபடுவோருக்கு பொறுமையை தந்தருளி கஷ்டமான சூழலில் மணம் தளராமல் இருக்கவும், சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இருக்கவும் அருள் புரிந்திடுவாள்.

பிரம்மச்சாரிணி மந்திரம்:

ததாநகர பத்மபியம் அக்ஷமாலா கமண்டலம்

தேவி பிரசிதட்டு மயி பிரம்மசாரின நுத்தன

பிரம்மசாரிணி தேவியின் இந்த மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலமாக தேவியின் அருள் கிடைக்கும். இந்தியாவில் கன்னியாகுமரியில் அன்னை பிரம்மச்சாரிணியாக அருள் புரிகிறாள்.