சோர்வடையும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!

116

சோர்வடையும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!

மனிதனாக பிறந்தால் இன்பம், துன்பம் இரண்டும் கலந்து வரும். வாழ்க்கை என்பது ஒரு வட்டம் என்பது அனைவருக்கும் புரிய வைக்கும். ஆனால், ஏழையாக பிறந்த ஒவ்வொருவரும் தினந்தோறும் ஒரு வேளை சாப்பாட்டிற்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறான். ஒவ்வொருவரும் உடலை வருத்திக் கொண்டு வேலை பார்க்கும் நிலைக்கு இந்த காலகட்டம் தள்ளிவிட்டது.

இந்த இக்கட்டான சூழலில் பொருளாதாரம் ஈட்டுவதற்கு நமது மனது சோர்வடையாமல் இருக்க வேண்டும். ஒருவேளை நமது மனது சோர்வடைந்தால் அப்போது, இந்த மாரியம்மனின் தாலாட்டு பாடல் பாடினால், மனம் இறங்கி நமது கவலையை நீக்குவாள்.

தினந்தோறும் இந்த மந்திரம் அல்லது பாடலை பாடினால், கஷ்டங்கள் நீங்கும். தினந்தோறும் சொல்ல முடியவில்லை என்றால் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் நன்மை உண்டாகும்.

மாரியம்மன் மந்திரம்:

அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்

கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|

வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்

வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்