தண்டனையிலிருந்து தப்பிக்க சனீஸ்வரன் மந்திரம்!

54

தண்டனையிலிருந்து தப்பிக்க சனீஸ்வரன் மந்திரம்!

தப்பு செய்தால் கண்டிப்பாக தண்டனை உண்டு. எப்பொழுதும் நீதிமானாக திகழும் சனி பகவான், நல்லவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கவும், தீயவர்களுக்கு தண்டனை கொடுக்கவும் தவறவே மாட்டார். அதாவது, சனியைப் போன்று கொடுப்பவரும் இல்லை, சனியைப் போன்று கெடுப்பவரும் இல்லை என்பார்கள். நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமானவர்கள் ஒன்று குரு பகவான் மற்றொன்று சனி பகவான்.

ஈசன் என்றும் கூட பாராமல், அந்த ஈஸ்வரனையே பிடித்தமையால், சனீஸ்வரன் என்று அழைக்கப்பட்டார். சனி பகவான் பிடிக்காத ஒரே ஒரு கடவுள் யார் என்றால், அது விநாயகப் பெருமான் தான். இன்று போய் நாளை வா, இன்று போய் நாளை வா என்று சொல்லிச் சொல்லியே ஏழரை ஆண்டுகள் சனி பகவான் பிடியில் இருந்து தப்பித்துவிட்டார். ஆகையால், தான் ஒருவரது ஜாகத்தில் சனி தோஷம் இருந்தால், முதலில் விநாயகப் பெருமானுக்கு விளக்கு ஏற்றி வழிபடுமாறு ஜோதிடர்கள் வலியுறுத்துகின்றனர்.

சரி இதெல்லாம் இருக்கட்டும், இன்று நாம் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம் தெரியுமா? என்னதான் பாவங்கள் செய்திருந்தாலும், சனி பகவானின் தண்டனையிலிருந்து தப்பிக்க அவரிடமிருந்து விடுபட மனமுருகி வேண்டி இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். ஆனால், அவரது தண்டனை கண்டிப்பாக உண்டு. ஆனால், என்ன இந்த மந்திரத்தை சொல்லி வந்தால், தண்டனை மட்டும் குறைக்கப்படும்.

ஒவ்வொரு கோயிலிலும், நவக்கிரகங்களில் உள்ள சனிபகவானை வழிபடும் போது இந்த மந்திரத்தை சொல்லி வாருங்கள். இதோ அந்த மந்திரம்…

சனிபகவானுக்குரிய மந்திரம்:

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!

சச்சரவின்றி சாகா நெறியில்

இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

ஒவ்வொரு சனிக்கிழமையும் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று நவரக்கிரகத்தில் உள்ள சனிபகவானை இந்த மந்திரங்கள் சொல்லி வழிபட்டு வாருங்கள். அதோடு, ஏழை, எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். இப்படி செய்து வந்தால், சனி பகவானின் கருணை உங்கள் மீது படும். அதன் பிறகு நல்லதே நடக்கும் என்பது ஐதீகம்.