திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் போற்றி துதி இது!

52

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் போற்றி துதி இது!

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் போற்றி துதி இது. இந்தத் துதியை தினமும் 108 முறை உச்சரிப்பது பெருமாளின் அருளை உங்களுக்கு கிடைக்கச் செய்யும். மேலும் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளின் படத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து, தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி இம்மந்திரத்தை 108 முறை துதிக்க நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தவித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணமாகும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல அழகான அறிவாற்றல் மிக்க குழந்தை பேறு கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி நல்ல லாபங்கள் உண்டாகும். நீண்ட கால நோய் பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். வெங்கடேஸ்வர பெருமாள் சனி பகவானின் அம்சமாக கருதப்படுவதால் சனி கிரக தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

மனிதர்களாக பிறந்து விட்டாலே நாம் எந்த அளவிற்கு இன்பங்கள் அனுபவிக்கிறோமோ அதே அளவு துன்பங்களையும் அனுபவிக்கிறோம். மும்மூர்த்திகளில் பக்தர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டு அவர்களை எப்போதும் காப்பவராக இருப்பது மகா விஷ்ணுவாகிய திருமால் தான்.

செல்வத்தின் முழு உருவான கருணை குணம் அதிகம் கொண்ட லட்சுமி தேவியை தனது இதயத்தில் வைத்திருந்து திருப்பதி திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரராக அருள்பாலிக்கிறார். அப்படியான வெங்கடேச பெருமாளின் மீது இயற்றப்பட்ட இந்த போற்றி துதியை தினமும் துதித்து வருவதால் நலங்கள் பல ஏற்படும்.

வெங்கடேஸ்வர போற்றி துதி…!

 1. ஓம் அனந்த நாதா போற்றி
 2. ஓம் அயோத்தி ராஜா போற்றி
 3. ஓம் அச்சுதா போற்றி
 4. ஓம் அழகர்மலை அழகா போற்றி
 5. ஓம் அனந்த சயனா போற்றி
 6. ஓம் அநந்தாயா போற்றி
 7. ஓம் ஆலிலைக் கண்ணா போற்றி
 8. ஓம் ஆதிசேஷா போற்றி
 9. ஓம் ஆதித்யா போற்றி
 10. ஓம் இலட்சுமிவாசா போற்றி
 11. ஓம் கார்வண்ணா போற்றி
 12. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
 13. ஓம் கருட வாகனனே போற்றி
 14. ஓம் கமலக்கண்ணா போற்றி
 15. ஓம் கோவிந்தா போற்றி
 16. ஓம் கோபாலா போற்றி
 17. ஓம் கோபிநாதா போற்றி
 18. ஓம் கோவர்த்தனா போற்றி
 19. ஓம் கோகுலவாசா போற்றி
 20. ஓம் கோபியர் நேசா போற்றி
 21. ஓம் கேசவா போற்றி
 22. ஓம் மாதவா போற்றி
 23. ஓம் மதுசூதனா போற்றி
 24. ஓம் மதுராநாதா போற்றி
 25. ஓம் மாமலைவாசா போற்றி
 26. ஓம் மலையப்பா போற்றி
 27. ஓம் மணிவண்ணா போற்றி
 28. ஓம் மாயவா போற்றி
 29. ஓம் முகுந்தா போற்றி
 30. ஓம் மோகனசுந்தரா போற்றி
 31. ஓம் பத்மநாபா போற்றி
 32. ஓம் பரமாத்மா போற்றி
 33. ஓம் பரந்தாமா போற்றி
 34. ஓம் பரபிரம்மா போற்றி
 35. ஓம் பக்தவச்சலா போற்றி
 36. ஓம் பார்த்தசாரதி போற்றி
 37. ஓம் பாலச்சந்திரா போற்றி
 38. ஓம் பாற்கடல்வாசா போற்றி
 39. ஓம் நவநீத கிருஷ்ணா போற்றி
 40. ஓம் நந்த கோபால போற்றி
 41. ஓம் நந்த முகுந்தா போற்றி
 42. ஓம் நந்த குமாரா போற்றி
 43. ஓம் நரசிம்மா போற்றி
 44. ஓம் நாராயணா போற்றி
 45. ஓம் நமோ நாராயணா போற்றி
 46. ஓம் திரு நாராயணா போற்றி
 47. ஓம் லட்சுமி நாராயணா போற்றி
 48. ஓம் தேவகி நந்தனா போற்றி
 49. ஓம் தாமோதரா போற்றி
 50. ஓம் திருவிக்கிரமா போற்றி
 51. ஓம் ராமகிருஷ்ணா போற்றி
 52. ஓம் ராஜகோபாலா போற்றி
 53. ஓம் ஸ்ரீராமச்சந்திரா போற்றி
 54. ஓம் ரகுநாதா போற்றி
 55. ஓம் வேணுகோபாலா போற்றி
 56. ஓம் தீனதயாளா போற்றி
 57. ஓம் சத்திய நாராயணா போற்றி
 58. ஓம் சூரிய நாராயணா போற்றி
 59. ஓம் நமோ நாராயணா போற்றி
 60. ஓம் ஸ்ரீதரா போற்றி
 61. ஓம் திருவேங்கடா போற்றி
 62. ஓம் திருமலைவாசா போற்றி
 63. ஓம் முரளீதரா போற்றி
 64. ஓம் வைகுந்தவாசா போற்றி
 65. ஓம் ஸ்ரீலட்சுமி நாதா போற்றி
 66. ஓம் வாஸுதேவா போற்றி
 67. ஓம் யஸோத வத்சலா போற்றி
 68. ஓம் வாமனா போற்றி
 69. ஓம் திருவரங்க நாதா போற்றி
 70. ஓம் ஹயகிரீவா போற்றி
 71. ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி
 72. ஓம் தன்வந்த்ரியே போற்றி
 73. ஓம் ஜெகன்நாதா போற்றி
 74. ஓம் கலியுகவரதா போற்றி
 75. ஓம் வரதராஜா போற்றி
 76. ஓம் சௌந்தரராஜா போற்றி
 77. ஓம் குருவாயூரப்பா போற்றி
 78. ஓம் சாரங்கபாணியே போற்றி
 79. ஓம் யசோதை மைந்தனே போற்றி
 80. ஓம் பலராமா போற்றி
 81. ஓம் பரசுராமா போற்றி
 82. ஓம் ஜெயராமா போற்றி
 83. ஓம் பாலமுகுந்தா போற்றி
 84. ஓம் பாண்டுரங்கா போற்றி
 85. ஓம் பண்டரிநாதா போற்றி
 86. ஓம் புண்ணியனே போற்றி
 87. ஓம் பக்த நாதா போற்றி
 88. ஓம் கோகிலநாதா போற்றி
 89. ஓம் பாஸ்கரா போற்றி
 90. ஓம் விஷ்ணவே போற்றி
 91. ஓம் ஸ்ரீரங்கனாதா போற்றி
 92. ஓம் பசுபாலகிருஷ்ணா போற்றி
 93. ஓம் நரநாராயணா போற்றி
 94. ஓம் துளஸீதாசா போற்றி
 95. ஓம் முரளீதரா போற்றி
 96. ஓம் தயாநிதியே போற்றி
 97. ஓம் யஸோத வத்ஸலா போற்றி
 98. ஓம் க்ருக்ஷிகேசா போற்றி
 99. ஓம் வாமனா போற்றி
 100. ஓம் வராகா போற்றி
 101. ஓம் நாகராஜனே போற்றி
 102. ஓம் பத்ரி நாராயணா போற்றி
 103. ஓம் ஸத்ய நாராயணா போற்றி
 104. ஓம் ஹரி நாராயணா போற்றி
 105. ஓம் ஸச்சிதானந்தனே போற்றி
 106. ஓம் துஷ்ட ஸம்ஹாரக போற்றி
 107. ஓம் துரித நிவாரண போற்றி
 108. ஓம் ஸ்ரீ வேங்கடேசா போற்றி போற்றி