திருமணத் தடை அகற்றும் திருப்பள்ளி எழுச்சி

204

காக்கும் கடவுளான விஷ்ணுவையும், மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வழிபட்டால் திருமணம் கைகூடும். கனிவான வாழ்க்கை அமையும்.

விஷ்ணுமார்கழி மாதம் 30 நாட்களும், சைவ- வைணவத் திருத்தலங்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாராயணம் செய்வார்கள். கன்னிப்பெண்கள், அதிகாலையில் எழுந்து நீராடி, வாசலில் கோலமிடுவார்கள். அந்தக் கோலத்தின் மையத்தில் மங்கலம் தரும் மஞ்சள் நிற ‘பூ’வான பரங்கிப் பூவை, சாணத்தில் நடுவில் வைத்து, மகாலட்சுமியை வரவேற்க வேண்டும்.

பிறகு ஆலயத்திற்குச் சென்று திருவனந்தல் நடைபெறும் நேரத்தில், சிவன் வழிபாடும், நடராஜர் வழிபாடும் செய்தால் இறையருளால் இனிய வாழ்க்கை அமையும். மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் சிவபுராணம் பாடுவது நல்லது.

காக்கும் கடவுளான விஷ்ணுவையும், மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் வழிபட்டால் திருமணம் கைகூடும். கனிவான வாழ்க்கை அமையும்.