திருமண தடை நீங்க சொல்ல வேண்டிய பராசக்தி மந்திரம்!

154

திருமண தடை நீங்க சொல்ல வேண்டிய பராசக்தி மந்திரம்!

பராசக்தி ஸ்லோகம்…

ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகிச்வரி யோக பயங்கரி

ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம வஸமாகர்ஷய

கர்ஷய ஸ்வாஹா

– ஸ்வயம்வரா பார்வதி மூல மந்திரம்

விளக்கம்: ஹ்ரீம் எனும் பீஜத்தில் உறைபவளே, யோகினியே, யோகேஸ்வரியே, சகல ஜீவன்களும் எனக்கு வசமாக அருள்புரிவாய் அம்மா.

இத்துதி, தேவி வழிபாட்டில் ஸ்வயம்வர கல்யாணி என்று போற்றப்படுகிறது. ருக்மிணி கிருஷ்ணனை இத்துதியை ஜபித்தே மணந்தாள். பார்வதியாக அவதரித்தபோது உமாதேவி இத்துதியை பராசக்தியைக் குறித்து துதித்தே ஈசனை மணந்தாள்.

இத்துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்றும் குறிப்பாக பங்குனி உத்திர தினத்தன்றும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.