திருமண வரன் அமைய சொல்ல வேண்டிய மந்திரம்!

92

திருமண வரம் கை கூடி வர சொல்ல வேண்டிய மந்திரம்!

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றெல்லாம் சொல்வார்கள். அதோடு, வாழையடி வாழையாக சந்ததியை வளர்க்கும் ஒரு விஷயமாக திருமணம் சிறந்து விளங்குகிறது. இப்படிப்பட்ட ஒரு மங்களகரமான திருமணம் செய்து கொள்ள எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். வயதாகிக் கொண்டிருந்தாலும் இன்னும் திருமண வரன் அமையவில்லையே என்று சொல்பவர்களும் உண்டு. அவர்கள் தினமும் வீட்டில் பூஜை செய்யும் போது இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

திருமண வரன் அமைய சொல்ல வேண்டிய மந்திரம்:

மந்திரம்: 1

காமேஸ் வராய காமாய காம பாலாய காமினே நம:

காம விஹாராய காம ரூபதராய ச

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே

மங்களார்த்தம் மங்களேசிமாங்கல்யம் தேஹிமே சதா:

மந்திரம் 2:

ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி

யோகேஸ்வரி யோக பயங்கரி

ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய

முக ஹ்ருதயம் மம வசம்

ஆகர்ஷ ஆகர்ஷாய நமஹ:

இந்த மந்திரத்தை சிவனை திருமணம் செய்ய பார்வதி தேவி அருளியுள்ளார். காதலிப்பவர்களும் தங்களது காதல் கை கூட இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் காதல் திருமணம் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.