தீராத கஷ்டங்களையும் தீர்க்கும் கருட ரகசிய மந்திரம்!
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள், பிரச்சனைள் இருக்கும். வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று எவன் ஒருவன் சொல்கிறானோ அவன் சித்தனாகத் தான் இருக்க முடியும். துன்பமே இல்லை என்றால் அவன் இறைவனை மறந்துவிடுவான். கால நிலைக்கு ஏற்ப, கிரக நிலைகளின் சஞ்சாரத்தின் படி ஒருவனுக்கு நல்லது, கெட்டது நடக்கிறது. ஒருவன் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பலா பலன்கள் அமைகிறது. சரி, இந்தப் பதிவில், நாம் தீராத கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
கஷ்டங்களிலிருந்து விடுபட கருட பகவானின் இந்த மந்திரத்தை சொல்லி வர வேண்டும். பிரச்சனைகளை தாங்கிக் கொள்ள கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வாரை வழிபட வேண்டும். குறிப்பாக, பிரச்சனைகளை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை கருடாழ்வாரின் இந்த மந்திரம் நமக்கு அளிக்கும். தினந்தோறும் கருடாழ்வாரை நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் இருக்க கூடிய சங்கடங்கள், துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
கருடாழ்வார் மந்திரம்:
ஓம் ஸ்ரீ காருண்யாய
கருடாய வேத ரூபாய
வினதா புத்ராய
விஷ்ணு பக்தி பிரியாய
அமிர்த கலச ஹஸ்தாய
பஹு பராக்ரமாய
பக்ஷி ராஜாய சர்வ வக்கிர
சர்வ தோஷ, விஷ சர்ப்ப
விநாசனாய ஸ்வாஹா