தீர்க்க சுமங்கலியாக வாழ சொல்ல வேண்டிய மந்திரம்!

24

தீர்க்க சுமங்கலியாக வாழ சொல்ல வேண்டிய மந்திரம்!

திருமணமான பெண்கள் அனைவருமே தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். நெற்றியில் குங்குமமிட்டும், கழுத்தில் தாலி அணிந்து கொண்டும், காலியில் மெட்டியுடனும் இருக்கவே திருமணமான பெண்கள் விரும்புவார்கள். மேலும், தங்களது கணவன்மார்களுக்கு எந்தவித நோயும் வரக் கூடாது, எதுவும் நேரக் கூடாது என்றும் விரதமிருந்து அம்மனுக்கு வழிபாடு செய்வார்கள். இப்படி, திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றால் சொல்ல வேண்டிய மந்திரம் இது…

தீர்க்க சுமங்கலியாக வாழ சொல்ல வேண்டிய மந்திரம்:

ஓங்கார பூர்விகே தேவி வீணா புஸ்தக தாரிணி

வேதாம்பிகே நமஸ்துப்யம் அவதவ்யம் ப்ரயச்சமே

பதிவ்ரதே மஹாபாகே பர்த்துச்ச பிரியவாதிநீ

அவதவ்யம் ச சௌபாகியம் சௌமாங்கல்யம் ச தெஹிமே

பொருள்:

ஓங்காரத்தை முன்னிட்டவளே, வீணை புஸ்தகம் தரித்த வேத மாதாவே…​என்னை என்றும் சுமங்கலியாக வாழச்செய் என்பது தான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

மந்திரம் சொல்லும் முறை:

தினந்தோறும் காலையில் எழுந்த தும் திருமாங்கல்யத்தைத் தொட்டுக் கண்ணில் வைத்து வணங்கிவிட்டு, இந்த மந்திரத்தை 3 முறை சொல்ல வேண்டும். இதே போன்று மாலையில், விளக்கேற்றி லட்சுமி முன்பு நின்று கொண்டு இந்த மந்திரத்தை 9 முறை சொல்லி வர தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.