துன்பங்கள் தீர முருகன் மந்திரம்!

118

துன்பங்கள் தீர முருகன் மந்திரம்!

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை என்பார்கள். யாமிருக்க பயமேன் என்று முருகப் பெருமான் அருளியுள்ளார். முருகனுக்குரிய மந்திரத்தை தினமும் சொல்லி வந்தாலோ அல்லது முருகனுக்குரிய நாட்களில் சொல்லி வழிபட்டு வந்தாலோ நமது கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.

முருகன் ஸ்லோகம்:

கந்தனும் வருவான் காட்சியும் தருவான்

கவலையை நீ விடுவாய் – மனமே

கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை

மறவாமல் நீ இருப்பாய் – மனமே.

சிக்கலில் வேல் எடுத்தான் சிங்கார வேலனானான்

செந்தூரில் போர் புரிந்தான் சூரனையே வதைத்தான்

சரவணன் அவனே ஷண்முகன் அவனே

சிவசக்தி வடிவானவன் – முருகன்.

தணிகையிலே அமர்ந்தான் தத்துவங்கள் சொன்னான்

தந்தைக்குக் குருவானான் தமிழுக்குத் துணையானான்

தரணியில் புகழோடு திருமறைகள் போற்ற

ஸ்வாமிமலையில் நின்றான் – தகப்பன்

சாமியாக நின்றான்.

பழமதைக் கேட்டான் பழனியிலே அமர்ந்தான்

பக்தர்களை அழைத்தான் அருள்ஞானப் பழம்தந்தான்

பழமுதிர்ச் சோலையில் அழகுடன் அமர்ந்தான்

பரங்குன்றில் மணமலை சூட்டிக்கொண்டான் – திருப்பரங்குன்றில்.

கந்தனும் வருவான் காட்சியும் தருவான்

கவலையை நீ விடுவாய் – மனமே

கனவிலும் நினைவிலும் அவன்திரு நாமத்தை

மறவாமல் நீ இருப்பாய் – மனமே.