தொழிலில் நஷ்டம் வராமல் தடுக்கும் மந்திரம்!

96

தொழிலில் நஷ்டம் வராமல் தடுக்கும் மந்திரம்!

ஜாதகத்தில் யாருக்கெல்லாம் சொந்தமாக தொழில் செய்யும் அமைப்பு இருக்கிறதோ, அவர்களால் மட்டுமே முழுமையாக தொழில் செய்து லாபம் ஈட்ட முடியும். இதுவே சம்பளத்திற்கு வேலை பார்க்கும் சிலர், சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர்களது ஜாதக அமைப்பு மாறுபட்டிருந்தால் அவர்களால் தொழிலில் லாபம் ஈட்டவே முடியாது.

ஒருவருக்கு அரசு வேலைதான் யோகம் இருக்கிறது என்று ஜாதகத்தில் இருந்தால், அவர், அந்த வேலைக்கு தான் முயற்சிக்க வேண்டும். அதை விட்டு விட்டு சொந்தமாக தொழில் செய்கிறேன், வருமானம் இல்லை என்று புலம்பக் கூடாது. மாறாக, எந்த காலத்தில் எந்த தொழிலில் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செய்ய வேண்டும்.

சரி, என்னதான் தொழிலில் செய்து தான் முன்னேற வேண்டும் என்று இருப்பவர்கள் தொழிலில் நஷ்டம் வராமல் தடுக்க இந்த மந்திரத்தை சொல்லி வர வேண்டும்.

தொழிலில் நஷ்டம் வராமலிருக்க சொல்ல வேண்டிய மந்திரம்:

கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர:

சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம்

யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ

நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம்

தொழில் செய்வதற்கு முன்னதாக இந்த மந்திரத்தை தினந்தோறும் சொல்லி வந்தால் தொழிலில் லாபம் ஈட்டலாம் என்பது ஐதீகம்.