தொழிலில் லாபம் அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

200

தொழிலில் லாபம் அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

தொடர்ந்து, வியாபாரம் மந்தமாகவும், நஷ்டமாகவும் சென்று கொண்டிருக்கிறது என்று சொல்பவர்கள் இந்த மந்திரத்தை சொல்லி வழிபட லாபம் அதிகரித்து பண வரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

காலையில், வியாபாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக கடையிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ மகாலட்சுமி தேவிக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். அப்போது, வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் வைத்து பாயாசம் கற்கண்டு, பழங்கள் ஆகியவற்றை நைவேத்தியமாக வைத்து மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்ய வேண்டும்.

அப்படி செய்வதன் மூலமாக கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வியாபாரத்தில் அதிக பண வரவு உண்டாகும்.

மகாலட்சுமி மந்திரம்:

ஸ்ரீசுக்ல மகா சுக்லே நவாங்கே ஸ்ரீமஹாலக்ஷ்மி நமோ நமஹ!!

அதே போன்று கடையில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாக ஒரு பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து விளக்கேற்றும் பொழுது கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் அந்த தண்ணீர் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும். இந்த சக்தி வாய்ந்த தண்ணீரை கடை முழுவதும் காலையில் 6.15 மணி முதல் 6.45 மணிக்குள்ளாக தெளித்துவிட வேண்டும். அப்படி செய்வதன் மூலமாக வியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இருந்த எதிர்மறை சக்திகள் நீங்கி லாபம் அதிகரித்து பண வருமானம் கூடும் என்பது ஐதீகம்.

ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி!

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய!

பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே!

ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா!!

தொழில் செய்யும் ஆவணங்கள் அல்லது புத்தகங்களை பயன்படுத்தும் போது எச்சில் தொட்ட புரட்டக் கூடாது. அது போன்று தான் பணத்தையும் எச்சில் தொட்டு எண்ணக் கூடாது. தெய்வீக புத்தகங்களை படிக்கும் போதும் சரி, ஸ்லோகங்களை படிக்கும் போதும் சரி அடுத்த பக்கத்திற்கு எச்சில் தொட்டு புரட்டக் கூடாது. இது போன்று எச்சில் தொட்டு புத்தகங்களையோ அல்லது ஆவணங்களையோ புரட்டினால் உங்களுக்கு தரித்திரம் தான் உண்டாகும்.