நாக தோஷம் உள்ளவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்!

49

நாக தோஷம் உள்ளவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்!

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி நாக சதுர்த்தி ஆகும். இந்த நாளில் விரதமிருந்து நாக சிலைகளுக்கு பூஜை செய்கின்றனர். இந்த விரதத்திற்கு நாக சதுர்த்தி விரதம் என்று கூறுகின்றனர். இந்த நாளில் 8 நாகங்களான காளிங்கன், ரட்சகன், வாசுகி, மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், தனஞ்சயன் மற்றும் கார்க்கோடகன் ஆகிய நாகங்களை வணங்கி வழிபடுதல் சிறப்பு.

ஒரு சிலரது ஜாதகத்தில் கிரகங்களின் தன்மை காரணமாக பிறக்கும் போதே அவர்களுக்கு ஒரு சில தோஷங்கள் அமைந்து விடுகிறது. செவ்வாய் தோஷம், நாக தோஷம் என்று பல சொல்லலாம். இந்தப் பதிவில் நாக தோஷத்திற்கான காரணங்கள், மந்திரங்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கப் போகிறோம்.

நாக தோஷம் காரணம்:

ஒருவரது ஜாகத்தில் ராகு அல்லது கேது பகவான் லக்னம் 2, 5, 7 மற்றும் 8 ஆகிய இடங்களில் இருக்கும் பட்சத்தில் அந்த நபருக்கு சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் ஏற்படுகிறது. பாம்புகளை கொல்வதனாலும், புற்றுகளை இடிப்பதனாலும் நாக தோஷம் ஏற்படுகிறது.

நாக தோஷம் காரணமாக, திருமணத் தடை, தாமதம், கணவன் – மனைவி பிரிவு, குழந்தையின்மை, வேலையின்மை, தொழில், வியாபாரத்தில் நஷ்டம் என்று பல கஷ்டங்கள், துன்பங்கள் வரும்.

நாக தோஷம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்:

ஓம் ரூபப் பிரபவம் நமஹ;

ஓம் சாரும் கேவும் நமஹ;

ஓம் சரவும் பரவும் நமஹ;

ஓம் நய்யும் மெய்யும் நமஹ;

ஓம் ஜெகமும் புரமும் நமஹ;

ஓம் காளத்தி மேளத்தி நமஹ;

ஓம் ஜாலும் மேலும் நமஹ;

ஓம் நகுடத்தி பெகுடத்தி நமஹ;

ஓம் சரகத்தி பாபத்தி நமஹ;

ஓம் சரசாலி பிரசாலி நமஹ;

ஓம்   ஓம்   ஓம்!

நாக தோஷம் உள்ளவர்கள் தினந்தோறும் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வந்தால் நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

பரிகாரம்: 1

நாக தோஷம் உள்ளவர்கள், காலை எழுந்து குளித்து முடித்து அருகிலுள்ள வள்ளி, தெய்வானையுடன் காட்சி தரும் முருகப் பெருமான் கோயிலுக்கு சென்று அவரை வழிபட்டு வருவது நல்லது.

பரிகாரம்: 2

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் நரசிம்மர் கோயிலுக்கு நரசிம்மரை தரிசனம் செய்து வர நாக தோஷம் நீங்கும். அதோடு, பாம்பு புற்று இருக்கும் கோயிலுக்கு சென்று புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவதோடு, நவக்கிரகத்தில் உள்ள ராகு – கேது பகவான் விக்கிரகங்களுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வருவது நாக தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.

பரிகாரம்: 3

வெள்ளி மோதிரத்தில் கோமேதக ரத்தினம் பதித்து வலது கையின் நடுவிரலில் அணிந்து கொண்டால் நாக தோஷம் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.

பரிகாரம்: 4

தினந்தோறும் சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களுக்கு பருப்பு வகையில் ஏதேனும் ஒன்றை தானமாக கொடுத்து வர நாக தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாக இருக்கும்.

பரிகாரம்: 5

நாக தோஷங்கள் உள்ளவர்கள் நாக தேவதைகளை மனதார வழிபட்டு வர நாக தோஷம் நீங்கும்.

பரிகாரம்: 6

பிரதோஷ நாட்களில் மௌன விரதம் இருந்து சிவனையும், உமாமகேஸ்வரியையும், நாக வல்லி அம்மனையும் வழிபட்டு வர நாக தோஷம் படிப்படியாக குறையும்.

பரிகாரம்: 7

ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியில் சுமங்கலிகள் விரதம் இருந்து ஆதிசேஷனை வழிபட்டு வர வேண்டியது கிடைக்கும்.

பரிகாரம்: 8

நாக சதுர்த்தி, நாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி ஆகிய நாட்களிலும் விரதமிருந்து நாகதேவதைகளை வழிபட்டு வர நன்மை உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.