நினைத்தது நிறைவேற விநாயருக்கு 7 நாட்கள் பூஜை!

145

நினைத்தது நிறைவேற விநாயருக்கு 7 நாட்கள் பூஜை!

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்று பாடல் உண்டு. ஒவ்வொரு தொழிலையும் தொடங்குவதற்கு முன்னதாகவோ, பூஜை செய்வதற்கு முன்னதாகவோ விநாயகரைத் தான் வழிபாடு செய்வார்கள். அதன் பின், மற்ற தெய்வங்கள். வினைகளை தீர்க்கும் விநாயகர் வழிபாட்டின் பிரத்யேகமான ஒரு வழிபாட்டைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

இந்த வழிபாட்டிற்கு விநாயகரை வழிபட தேவையான பூ எருக்கம் பூ. பூஜைக்கு முதல் நாளே எருக்கம் பூ 5 பறித்து வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்து குளித்து முடித்து எருக்கம் பூவை விநாயகர் படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அப்போது, உங்களது கோரிக்கைகளை விநாயகரிடம் சொல்லி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கு நடக்காத காரியமாக இருந்தாலும் சரி, தடைகள் வந்து கொண்டே இருக்கும் காரியமாக இருந்தாலும் சரி விநாயகரை வழிபட்டு நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரம் இது….

வயநமசி வவ்வும் கணபதி வகார கணபதி

யநமசிவ யவ்வும் கணபதி யகார கணபதி

நமசிவய நவ்வும் கணபதி நகார கணபதி

மசிவயந மவ்வும் கணபதி மகார கணபதி

சிவயநம சிவ்வும் கணபதி சிகார கணபதி

அரிஓம் ஐயும் கிலியும் சவ்வும் தேவரீர் கைவசமானது போல

சங்கு சக்கரம் சர்வ சத்துரு வசீகரம் உலகெல்லாம்

உனது வசம் ஆனது போல எனது வசமாக சிவா

உங்களது நீண்ட நாள் ஆசைகள், நிறைவேறாத ஆசைகள் என்று எது இருப்பினும் 7 நாட்கள் இந்த பூஜையை செய்து இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வர நினைத்தது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.