படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

216

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

தற்போது உள்ள இளைஞர்கள் அனைவரும் தாங்கள் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்பதை விரும்பியே வேலை தேடுகின்றனர். பலரும் தேடியும் கிடைக்காமல் கிடைத்த வேலைக்கு சென்று வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு தங்களுக்கு பிடித்த வேலை அமைய சொல்ல வேண்டிய மந்திரம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

ஒருவருக்கு படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வேண்டுமானால் திறமை மட்டும் இருந்தால் போதாது கடவுளின் ஆசியும் நிச்சயம் வேண்டும். கடவுளின் அருள் இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த அல்லது படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் இருப்பார்கள். இதற்கு முருகப் பெருமானின் அவதாரமாக இருக்கும் சுப்பிரமணிய சுவாமியை வணங்க நீங்கள் விரும்பும் வேலை கிடைக்கும்.

அதாவது சுப்ரமணிய சுவாமி படத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும். மேலும் சுப்ரமணிய சுவாமி திருக்கோலத்தில் அமைந்திருக்கும் முருகன் படம் மிகவும் அற்புதமானது. இந்த கோலத்தில் இருக்கும் முருகரை வணங்குபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும், சாதனை புரிய நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதனால் வேலை தேடுபவர்கள் வீட்டில் சுப்ரமணிய சுவாமி படத்தை வாங்கி வையுங்கள். தினமும் இந்த படத்தில் மலர் சாற்றி, கற்பூரம் ஏற்றி வழிபடுங்கள். மேலும் சுப்பிரமணிய சுவாமி ஸ்லோகத்தை அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, பின்னர் அந்த படத்தின் முன்பு சுப்பிரமணிய சுவாமி ஸ்லோகத்தை சொல்லுங்கள்.

ராஜராஜஸகோத் பூதம்!

ராஜீவாயத லோசனம்!

ரதீசகோடி ஸௌந்தர்யம்!

தேஹிமே விபுலாம் ச்ரியம்!!

மேற்கூறிய இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இது போல் தினமும் செய்து வர மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் நல்ல வேலை நிச்சயமாக கிடைக்கும். நம்பிக்கையுடன் தொடர்ந்து 48 நாட்களுக்கு இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து முருகப் பெருமானை வணங்கி வந்தால் தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை அமையும். நமக்கு எவ்வளவு தான் திறமைகள் இருந்தாலும் தெய்வத்தின் ஆசி இல்லாமல் எதையுமே நம்மால் சாதிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.