செல்வ, செழிப்போடு வாழ சொல்ல வேண்டிய மந்திரம்!
இறைவனுக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. எவன் ஒருவன் இறைவன் மீது அதிக பக்தி கொண்டிருக்கானோ அவனுக்கு இறைவன் அனைத்தையும் கொடுப்பார். பொன், பொருள், செல்வம் என்று அனைத்தும் மீது அனைவருக்கும் ஆசை உண்டு. அப்படி அனைத்தையும் பெறுவதற்கு நம் வீட்டில் பூஜையறையில் சொல்ல வேண்டிய மந்திரம் இது.
இன்று புதன் கிழமை பெருமாளுக்கு உகந்த நாள். அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று வீட்டு பூஜையறையில் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் செல்வ செழிப்போடு வாழலாம் என்பது ஐதீகம்.
விநாயகர் வழிபாடு:
அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றிற் பிறந்த
தொல்லை போம்! போகாத் துயரம்போம்
நல்ல குணமதிக மாமஞணைக் கோபுரத்தில் மேவு
கணபதியைக் கைதொழுதக் கால்!
முருகன் வழிபாடு:
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்
முருகா வென்றோது வார்முன்!
சக்தி வழிபாடு:
கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து
கிளர்ந்து ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கு இடமே!
எண்ணில் ஒன்று கில்லா
வெளியே வெளிமுதற் பூதங்களாகி
லிரிந்த அம்மோ
அளியேன் அறிவளலிற்கு அளவானது
அதிசயம!
சிவன் வழிபாடு:
சிவனோ டொக்குஞ் தெய்வத் தேடினுமில்லை
அவனோ டொப் பாரிங்கு யாவருமில்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே!
ஸ்ரீ ரெங்கநாதர் வழிபாடு:
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ? ஏழை நான்! அன்று
கருவரங்கத்துள் கிளந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை!
வீட்டில் பூஜை செய்து இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் செல்வ, செழிப்போடு வாழலாம் என்பது ஐதீகம்.