பாவங்களை அழிக்கும் கூஷ்மாண்டா தேவியின் மந்திரம்!

140

பாவங்களை அழிக்கும் கூஷ்மாண்டா தேவியின் மந்திரம்!

நவராத்திரி என்றாலே 9 இரவுகள். இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும்.

பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, சைலபுத்ரி, காத்யாயினி, ஸ்கந்தமாதா, மகாகௌரி, சித்திதாத்திரி, காளராத்திரி ஆகிய 9 தேவிகளையும் இந்த 9 நவராத்திரி நாட்கள் பூஜித்து வழிபடுவது. நவராத்திரி நிறைவு பெறும் நாளாக விஜயதசமி அன்று தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (7ஆம் தேதி) தொடங்கி 15 மற்றும் 16ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் இந்த நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது.

கூஷ்மாண்டா தேவியின் மந்திரம்:

சூரா சம்பூர்ண கலசம் ருத்ரபலு தவமேவச்சா ததான ஹஸ்த பத்மப்யாம் கூஷ்மாண்டா சுபதாஸ்து மே

தினந்தோறும் கூஷ்மாண்டா தேவியை வழிபட்டு இந்த மந்திரத்தை சொல்லி வர பாவங்கள் அழிந்து இன்பம் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் உள்ள கதம்பூர் என்ற பகுதியின் கூஷ்மாண்டா தேவியின் கோயில் உள்ளது.